Advertisment

ஏஐ தொழில்நுட்ப பயிற்சி: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு; அன்பில் மகேஷ் தகவல்!

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு பல வகையான போட்டிகள் நடத்தப்பட்டு அவர்கள் ஆண்டிற்கு ஒரு முறை வெளிநாட்டிற்கு கல்வி சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
AnbilMa

பிரான்சில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி Dassault Systems நிறுவனத்தின் தலைமையகத்திற்கு சென்று கல்விச் சார்ந்த உரையாடலில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழ்நாட்டில் அதிகளவிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி வழங்க காத்திருக்கிறோம்’ எனும் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு பல வகையான போட்டிகள் நடத்தப்பட்டு அவர்கள் ஆண்டிற்கு ஒரு முறை வெளிநாட்டிற்கு கல்வி சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். திமுக அரசு அமைந்த பிறகு, ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு மாணவர்கள் சென்று வந்த நிலையில், முதல் முறையாக ஆசிரியர்களும் 54 பேர் தேர்வு செய்யப்பட்டு பிரான்ஸ் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஆசிரியர்கள் அமைச்சர் என 60 பேர் தமிழகத்தில் இருந்து பிரான்ஸ் சென்றுள்ளனர். Dassault Systems நிறுவனம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 71 பள்ளிகளில் திறன் பயிற்சிகளை வழங்கி வருகின்றது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அவர்களின் பிரான்ஸ் நாட்டிலும் மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கி வருகின்றது. 'கனவு ஆசிரியர்’ விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரான்ஸ் நாட்டில் கல்விச் சுற்றுலா மேற்கொண்டு வருகின்றார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

இது குறித்து அறிந்த தாஸ்ஸவுல்ட் சிஸ்டம்ஸ் (Dassault Systems) நிறுவனம் தங்கள் தலைமையகம் வருமாறு அமைச்சருக்கு அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்று அந்நிறுவனத்தின் தலைமையகம் சென்ற அமைச்சர் அந்நிறுவனத்தின் 2040ஆம் ஆண்டிற்கான இலக்குகளை விவரிக்கும் காட்சிப் படங்களைப் பார்வையிட்டார். தொடர்ந்து அந்நிறுவன அதிகாரிகளுடன் கல்விச் சார்ந்த கலந்துரையாடலிலும் கலந்துகொண்டார்.

அப்போது அவர்களிடம் பேசிய அன்பில் மகேஷ், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் பள்ளிக் கல்வித் தொடர்பான திட்டங்கள் குறித்து அந்நிறுவனத்தாரிடம் எடுத்துரைத்தார். ‘தமிழ்நாட்டில் அதிகளவிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி வழங்க காத்திருக்கிறோம்’ எனும் விருப்பத்தை தெரிவித்த அவர், இதனை தமிழ்நாட்டின் முதலமைச்சரிடம் எடுத்துரைத்து செயல்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலயே முதன்முறையாக AI தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகளை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் ஒப்பந்தத்தை தமிழ்நாடு அரசு மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது Dassault Systems நிறுவனமும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி வழங்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின் போது தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் நரேஷ், இணை இயக்குநர் முனைவர் இராஜேந்திரன் மற்றும் Dessault நிறுவனத்தின் Valerie Ferret, Thierry Chevrot, Dominique Anderson ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Anbil Mahesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment