New Update
/indian-express-tamil/media/media_files/3YTaa7KdrNlZCBzhx9o7.jpg)
தமிழக பள்ளிக் கல்வித்துறை பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு பாடத்திட்டத்தில் 6-12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலைநாட்கள், தேர்வுகள், விடுமுறை உள்பட விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018-ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி இந்தாண்டிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.20-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை காலாண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. 12 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 19ம் தேதி முதல் 27ம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது.
செப். 28 முதல் அக். 2-ம் தேதி வரை 5 நாட்கள் காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நேரத்தை பொறுத்தவரை, 6ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையும், 7ம் வகுப்புகளுக்கு மதியம் 1.15 மணி முதல் 3.15 வரையும், 8ம் வகுப்புகளுக்கு 9.30 முதல் 12 மணி வரையும், 9ம் வகுப்புகளுக்கு 1.15 முதல் 4.30 மணி வரையும் நடைபெற உள்ளது.
10, 12-ம் வகுப்புகளுக்கு காலை 9.30 மணி முதல் 12.45 வரையும் தேர்வு நடைபெறும். 11-ம் வகுப்புக்கு மதியம் 1.15 மணி முதல் 4.30 மணி வரை தேர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.