/tamil-ie/media/media_files/uploads/2019/04/5916e794ba45b3a96bf57f8cc12a3278.jpg)
TN XI XII exam pattern changed - marks reduced from 600 to 500
கடந்த சில ஆண்டுகளாக தமிழக பள்ளி கல்வித்துறை XI மற்றும் XII போன்ற உயர்க் கல்வி பிரிவில் பல மாற்றங்களை செய்து வருகின்றது. உதாரணமாக 1200 மதிப்பெண்களுக்கு வைக்கப்பட்டத் தேர்வை 600 மதிப்பெண் தேர்வாக மாற்றியது. இதன் தொடர்சியாக, நேற்று வெளியான அரசாணையில் இனி XI,XII படிக்கும் மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கு பதிலாக 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம்.
அதன்படி மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் கணிதம் நீங்களாக இயற்பியல்,வேதியியல், உயிரியியல் (மற்றும் மொழி) பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம்.
பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் உயிரியியல் நீங்களாக இயற்பியல், வேதியியல், கணிதம் (மற்றும் மொழி)பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம் என்ற நடைமுறையை அரசு கொண்டுவந்துள்ளது. மேலும், 600 மதிப்பெண்களுக்கே தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல் என அனைத்து பாடங்களையும் எழுதலாம்.
மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கவும், எதிர் கால வாழ்கையை செம்மையாகத் திட்டமிடவும் இது வழி வகுக்கும் என்று பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.