scorecardresearch

காலாண்டு விடுமுறையில் முக்கிய மாற்றம் : பள்ளி கல்வித்துறை புதிய அறிவிப்பு

மாணவர்களுக்கும் விமுறை அறிவிப்பு குறித்து பள்ளி கல்வித்துறை ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

காலாண்டு விடுமுறையில் முக்கிய மாற்றம் : பள்ளி கல்வித்துறை புதிய அறிவிப்பு

தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு அக்.12 வரையும், 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக். 9 வரை காலாண்டு விடுமுறை நீடித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தற்போது காலாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தேர்வுகள் முடிந்து அனைத்து மாணவர்களுக்கும் விமுறை அறிவிப்பு குறித்து பள்ளி கல்வித்துறை ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி,  1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 9-ம் தேதி வரையும். 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 5-ம் தேதி வரையும் விடுமுறை அறிவித்திருந்தது

இதனிடையே தற்போது மாணவர்களுக்கு விடுமுறையை நீடித்து பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில்,

காலாண்டுத் தேர்வு முடிவுற்று அளிக்கப்படவேண்டிய விடுமுறை குறித்து கீழ்கண்டவாறு அறிவுரைகள் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது. 30.09.2022 அன்று காலாண்டுத் தேர்வு முடிந்தவுடன் 01.10.2022 முதல் 05.10.2022 விடுமுறை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணும் எழுத்தும் முதற்கட்ட பயிற்சி தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில் அளிக்கப்பட்டதால், அதற்கு பதிலாக ஈடுசெய்யும் விடுப்பு அளிக்குமாறு தொடந்து ஆசிரியர் சங்கங்களும், ஆசிரியர்களும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் 06/10/2022, 07/10/2022 மற்றும் 08/10/2022 ஆகிய மூன்று நாட்களும் ஈடுசெய்யும் விடுப்பாக கருதப்படும். (மீதமுள்ள 2 நாட்கள் பின்பு ஈடுசெய்யப்படும்.)

பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளுக்கு அக்டோபர் மாதம் 10ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும், தொடக்கப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு அக்டோபர் 10, 11, 12 தேதிகளில் எண்ணும் எழுத்தும் இரண்டாம் கட்ட பயிற்சி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சசி நிறுவன இயக்குநரின் கடிதத்தில் (ந.எண்.2411/ஈ2/2021 நாள்.26.09.2022) தெரிவித்துள்ளவாறு நடத்த இருப்பதால், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அக்டோபர் 13ம் தேதி பள்ளிகள் திறக்கும் என அறிவுறுத்தப்படுகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu school student quarterly exam holidays extension update

Best of Express