பள்ளி மாணவ, மாணவிகள் தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது.
அந்தவகையில், 2023-24-ம் ஆண்டுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்.15-ல் நடத்தப்பட உள்ளது.
இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பள்ளிக் கல்விதுறை மூலம் மாதம் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் (CBSE மற்றும் ICSE உட்பட) தேர்வு செய்யப்படுவார்கள்.
அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும்.
இத்தேர்விற்கு மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
எனவே, மாணவர்கள் இத்தேர்விற்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/-சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் செப்.20-க்குள் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.