Advertisment

13,331 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: சம்பளம், தேர்வு முறை என்ன?

தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம்; 13,331 காலியிடங்கள்; தகுதிகள், சம்பளம் என்ன? தேர்வு முறை எப்படி?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தற்காலிக ஆசிரியர் நியமனம் – பள்ளிக்கல்வித் துறை முக்கிய உத்தரவு

Tamilnadu schools appoints 13331 temporary teachers apply soon: தமிழக அரசுப் பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில், இதற்கான தேர்வு முறை மற்றும் அவர்களுக்கான சம்பளம் ஆகிய விவரங்கள் குறித்து இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நியமிக்க பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 13,331 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதையும் படியுங்கள்: மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை; தகுதிகள் மற்றும் உதவி எண் வெளியீடு

தகுதிகள்

இந்தப் பணியிடங்களுக்கு ஆசிரியர் பட்டயப்படிப்பு, ஆசிரியர் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இவர்களில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணிபுரிந்தவர்களுக்கும் நியமனங்களில் முன்னுரிமை அளிக்கப்படும்.

தேர்வு முறை

இந்தப் பணியிடங்களை சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு இணைந்து நியமித்துக் கொள்ளலாம்.

ஊதிய விவரம்

இடைநிலை ஆசிரியர்கள் – ரூ. 7,500

பட்டதாரி ஆசிரியர்கள் – ரூ. 10,000

முதுநிலை ஆசிரியர்கள் – ரூ. 12,000

காலியிடங்களை தெரிந்துக் கொள்வது எப்படி?

இந்த காலியிடங்களைப் பற்றிய விவரங்கள் அறிய, இடைநிலை ஆசிரியர்களைப் பொறுத்தவரை, வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தை தொடர்புக் கொண்டு, எந்ததெந்தப் பகுதிகளில் காலியிடங்கள் உள்ளன என்பதைத் தெரிந்துக் கொள்ளலாம்.

அதேபோல், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுநிலை ஆசிரியர் காலியிடங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தைத் தொடர்புக் கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்.

எனவே உங்களுக்கு அருகாமையில் உள்ளப் பள்ளியில் காலியிடங்கள் இருப்பது தெரிய வந்து, நீங்கள் அதற்கு தகுதியானவர் என்றால், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தை அணுகி விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு இணைந்து, வரபெற்ற விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, அதிலிருந்து தகுதியானவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இவ்வாறு நியமனம் செய்யப்படுபவர்கள், அடுத்த ஓராண்டிற்கு மேற்கூறிய ஊதிய அடிப்படையில் பணிபுரியலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs School
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment