Tamilnadu schools half yearly exam schedule released, Semi-annual exam date notification for government schools in Tamil Nadu, அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு; பொது வினாத்தாள் வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு | Indian Express Tamil

அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு; பொது வினாத்தாள் வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு

The half term date has been announced for the school students of class 6 to 12 in Tamil Nadu: தமிழகத்தில் 6 முதல் 12 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது; மேலும், மாநில அளவில் பொதுவான வினாத்தாள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது

அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு; பொது வினாத்தாள் வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு

தமிழகத்தில் அரசு பாடத்திட்டத்தின் கீழ் நடைபெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், டிசம்பர் 15 ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கி, 23 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6,8,10,12 ஆம் வகுப்புகளுக்கு முற்பகலிலும், 7,9,11 ஆம் வகுப்பு பிற்பகலிலும் தேர்வுகள் நடைபெறும் வகையில் தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படையில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காலாண்டு தேர்வு வினாத்தாள்களை பள்ளிகளே தயாரித்துக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது மாநில அளவில் பொதுவான வினாத்தாள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu schools half yearly exam schedule released