தமிழகத்தில் பொதுத் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், தங்கள் பள்ளியில் பயிலும் 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை வழங்க தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
இதில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அவர்களின் மாணவர்கள் நேரடி வகுப்புகளின் கலந்துக் கொண்ட வேலை நாட்களின் எண்ணிக்கையை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும், மாணவர்களுக்காக அறிவியல் ஆய்வகங்களும் செயல்பட்டு வருகின்றன.
இருப்பினும், நேரடி வகுப்புகள் கட்டாயம் இல்லாததால், பல மாணவர்கள் வீட்டிலேயே ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர். ஆனால், இந்த மாணவர்களும் பொதுத் தேர்வுகளில் கலந்துக் கொள்வதை உறுதிசெய்ய கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள். என பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
மேலும் கடந்த இரண்டு வாரங்களில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட, மின்வெட்டு காரணமாக பல மாணவர்கள் இணைய இணைப்புகளைப் பெற முடியாததால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது என்றும் அந்த அதிகாரி கூறினார்.
அதனால், பொதுத் தேர்வில் பங்கேற்க கூடிய மாணவர்களின் அனைத்து விவரங்களையும் வழங்குவதற்கு முன், பொதுத் தேர்வுகளுக்குத் தகுதிபெறும் அனைத்து பள்ளிகளும் மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளித்த பிறகே தேர்வில் கலந்து கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
மேலும், தேர்வுக்கு வர விரும்பாத மாணவர்களைக் கண்டறியவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வுத்துறை இயக்குனரகம், அதன் அறிவிப்பில், பொதுத் தேர்வுகளை எழுத உள்ள மாணவர்களைப் பதிவு செய்யும் செயல்முறையை முடிக்க எந்த காலக்கெடுவையும் குறிப்பிடவில்லை. அதேநேரம், 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் நடத்துவது தொடர்பான எந்த விவரங்களையும் தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிடவில்லை என்றும் அந்த அதிகாரி கூறினார்.
இந்த ஆண்டு, 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு படிக்கும் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பொதுத் தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil