தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2/7
தமிழகத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டுக்கான காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு நடைபெறும்.
3/7
முதல் காலாண்டில் நடத்தப்பட்ட பாடங்களில் இருந்து இந்தத் தேர்வுக்கான வினாத்தாள்கள் தயாரிக்கப்படும். இந்தப் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர் குழு வினாத்தாள்களை தயார் செய்யும். இதற்கான ஏற்பாடுகள் ஒவ்வொரு மாவட்ட அளவிலும் மேற்கொள்ளப்படும்.
Advertisment
4/7
தேவையான எண்ணிக்கையில் வினாத்தாள்கள் தயார் செய்யப்பட்டு, அரசுப் பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார்களுக்கு விநியோகம் செய்யப்படும்.
5/7
பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அட்டவணையின்படி காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 20 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
6/7
இதனையடுத்து அக்டோபர் 3 ஆம் தேதி இரண்டாம் பருவத்திற்கான வகுப்புகள் தொடங்குகிறது. அந்த வகையில் பார்த்தால் இந்த ஆண்டு காலாண்டு விடுமுறை நான்கு நாட்கள் மட்டுமே இருக்கும்.
Advertisment
Advertisements
7/7
அவற்றிலும் செப்டம்பர் 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை என்பதால், 2 நாட்கள் மட்டுமே காலாண்டு விடுமுறை வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.