Advertisment

அரசு தொழில் பயிற்சி மையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகவல்!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், காரைக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து சேர்ந்து கொள்ளலாம்.

author-image
WebDesk
New Update
Sivans

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலுள்ள  அரசு  தொழிற்பயிற்சி  நிலையத்தில்  2024-ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில், காலியாகவுள்ள இடங்களுக்கான நேரடி சேர்க்கை வரும் அக்டோபர் 30-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்,தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisment

காரைக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மேம்பட்ட CNC மெஷினிங் டெக்னிஷியன் (Advanced CNC Machining Technician), அடிப்படை வடிவமைப்பாளர் மற்றும் மெய்நிகர் சரிபார்ப்பாளர் (Basic Designer and Virtual Verifier (Mechanical)),  தொழில்துறை ரோபாட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்ப வல்லுநர் (Industrial Robotics and Digital Manufacturing Technician), பொருத்துநர் (Fitter), கடைசலர் (Turner), இயந்திர வேலையாள்(Machinist), கணினி இயக்குபவர் (COPA) போன்ற தொழிற்பிரிவுகளில் இன்னும் சில காலியிடங்களே உள்ளன. அதற்கான நேரடி சேர்க்கை வரும் அக்டோபர் 30-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

எனவே, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், காரைக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து சேர்ந்து கொள்ளலாம். அதுமட்டுமன்றி,  பயிற்சி பெறுகின்ற மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டண சலுகை, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடைகள், விலையில்லா காலணி, வரைபடக் கருவிகள், நோட்டுப் புத்தகங்கள், போன்றவை இலவசமாக வழங்கப்படும். மேலும், ஆண்/பெண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ. 1,750/- உதவித்தொகையும் வழங்கப்படும்.  

பயிற்சி முடித்த மாணவர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் 100%  வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.  கடந்த ஆண்டு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களான Ashok Leyland-Hosur, TITIAN-Hoaur, TVS-Chennai, Texmo Industries-Coimbatore போன்ற நிறுவனங்களில் 100%  வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்பட்டுள்ளது. மேலும், சேர்க்கை தொடர்பான  கூடுதல் விவரங்களுக்கு 94990 55784, 94990 55785, 97900 93723,  73739  49660 ஆகிய  அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி  ஆஷா  அஜித், தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Education Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment