சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்ட தகவலின்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு, தாட்கோ மற்றும் சென்னையின் விவேஷியஸ் அகாடமி இணைந்து "டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சியிடுதல்" என்ற 30 நாட்கள் பயிற்சியை வழங்குகின்றன.
பத்தாம் அல்லது பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி, 18-30 வயதுடையவர்களும், ஆண்டுச் சம்பளம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ளவர்களும் www.tahdco.com இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். பயிற்சி, தங்குமிடம், உணவு உள்ளிட்ட செலவுகள் தாட்கோ மூலம் வழங்கப்படும். பயிற்சியை முடித்தவர்களுக்கு NSDI அங்கீகரித்த சான்றிதழும் வழங்கப்படும்.