தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 11 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 17.10.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!
பாதுகாப்பு அலுவலர் (Protection Officer)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகவியல்/ சமூகப்பணி/ குழந்தைகள் மேம்பாடு/ மனித உரிமைகள் பொது நிர்வாகம்/ உளவியல்/ சட்டம்/ பொதுச் சுகாதாரம்/ சமூக வள முகாமைத்துவம் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 27,804
சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal cum Probation
Officer)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகவியல்/ எல்.எல்.பி முடித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 27,804
ஆற்றுப்படுத்துநர் (Counsellor)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகவியல்/ உளவியல்/ பொதுச் சுகாதாரம் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 18,536
சமூகப் பணியாளர் (Social Worker)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகவியல்/ சமூகப்பணி/ சமூக அறிவியல் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 18,536
கணக்காளர் (Accountant)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வணிகவியல்/ கணிதம் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 18,536
தகவல் பகுப்பாளர் (Data Analyst)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.சி.ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 18,536
உதவியாளர் உடன் கூடிய தகவல் உள்ளீட்டாளர் (Assistant-cum-Data
Entry Operator)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 13,240
புறத்தொடர்பு பணியாளர் (Outreach Workers)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 10,592
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2022/09/2022092988.pdf என்ற இணையதள பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : District Child Protection Officer, District Child Protection Unit, No.58, Suriyanarayanan Salai, Royapuram, Chennai- 600 013
விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.10.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2022/09/2022092988.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.