Advertisment

சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங், எம்.பி.ஏ படித்தவர்கள் விண்ணப்பிங்க!

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு; இன்ஜினியரிங், எம்.பி.ஏ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
jobs

அரசு வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசின் சமூக நலத் துறையில், பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 06.04.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: சென்னை குடிநீர் வாரிய வேலை… எழுத்துத் தேர்வு இல்லை… 108 பணியிடங்கள்… உடனே விண்ணப்பிங்க!

Senior Consultant – IT

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : P.G. degree in Computer Application or B.Techi BE or PG degree in IT/ Computer Science படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 75,000

Senior Consultant - Grievance Redressel

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : P.G. degree in Computer Application or B.Techi BE or PG degree in IT/ Computer Science படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 75,000

Senior Consultant — Accounts and Fund Management

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : CA/CS/CMA (CWA) or MBA (Finance)  படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 75,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cms.tn.gov.in/sites/default/files/announcement/SPMU_recruitment_230323.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Director, Directorate of Social Welfare, 2nd Floor, Panagal Maligai, Saidapet, Chennai-15

விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.04.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cms.tn.gov.in/sites/default/files/announcement/SPMU_recruitment_230323.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment