தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20, 2023 வரை 3986 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டன. இந்த தேர்வை சுமார் 9,96,089 மாணவ மாணவிகள் எழுதினர். மேலும் 11 ஆம் வகுப்பு தேர்வுகளும் இந்தக் காலக்கட்டத்தில் நடத்தப்பட்டன. இந்தநிலையில், 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு எப்போது ரிசல்ட் வெளியிடப்படும் என தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.
இதையும் படியுங்கள்: ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி… பிளஸ் டூ தேர்ச்சியில் கீழே விழுந்த மாவட்டங்கள்; சிறப்பு முயற்சிகளை அரசு எடுக்குமா?
இதற்கிடையில், 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (மே 8) வெளியிடப்பட்டன. இதனையடுத்து 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி எப்போது என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இந்தநிலையில், 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19 அன்று வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். தேர்வு முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருந்த மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு சற்று நிம்மதியை அளித்துள்ளது.
10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்வதற்கான படிகள் இங்கே:
படி 1: தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியத்தின் (TNBSE) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்: https://dge.tn.gov.in/result.html அல்லது https://tnresults.nic.in/
படி 2: “TN Board Exam Results 2023” என்று உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
படி 3: வழங்கப்பட்ட விருப்பங்களிலிருந்து தொடர்புடைய தேர்வைத் தேர்ந்தெடுக்கவும், அதாவது 10 ஆம் வகுப்பு அல்லது 11 ஆம் வகுப்பு.
படி 4: இப்போது உங்கள் ரோல் எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.
படி 5: “சமர்ப்பி” பொத்தானைக் கிளிக் செய்யவும்.
படி 6: முடிவு திரையில் காட்டப்படும்.
படி 7: முடிவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களைச் சரிபார்க்கவும்.
படி 8: பதிவிறக்கம் செய்து, எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil