scorecardresearch

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு; ரிசல்ட் எப்போது?

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; ரிசல்ட் எப்போது வெளியிடப்படும்? செக் செய்வது எப்படி? முழு விவரம் இங்கே

Class 10 Exams
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி முதல். ஏப்ரல் 20 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 4,207 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வை சுமார் 9,96,089 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்.

இதையும் படியுங்கள்: ஆர்.டி.இ மூலம் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி; விண்ணப்பிப்பது எப்போது? எங்கே?

இந்தநிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே மாதத்தில் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக மே 17 ஆம் அரசு தேர்வுகள் இயக்குனரகம் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியிடப்படும். மேலும், மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட அலைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

படி 1: அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்: https://dge.tn.gov.in/result.html அல்லது https://tnresults.nic.in/

படி 2: முகப்புப் பக்கத்தில், SSLC தேர்வு 2023 முடிவு என்பதைக் கிளிக் செய்யவும்

படி 3: உள்நுழைவு பக்கம் திரையில் தோன்றும்

படி 4: பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்

படி 5: முடிவு திரையில் தோன்றும்.

படி 6: பிரிண்ட் அவுட் எடுத்து எதிர்கால குறிப்புக்காக சேமிக்கவும்

எந்தவொரு மாணவரும் தாங்கள் பெற்ற மதிப்பெண்களில் திருப்தியடையாத நிலையில், முடிவை மறு கூட்டல் அல்லது மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம் தேர்வு முடிவு வெளியான பிறகு, மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவத்தை தேர்வுத்துறை வெளியிடுகிறது. அவர்கள் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் மறுமதிப்பீட்டிற்கு குறிப்பிட்ட கட்டணத்தையும் செலுத்த வேண்டும். மதிப்பெண்கள் அதிகரித்தால், புதுப்பிக்கப்பட்ட மதிப்பெண் குறிப்பு வெளியிடப்படும். தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு உடனடியாக துணைத் தேர்வு நடத்தப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu sslc exam results date and how to check online