10 ஆம் வகுப்பு தமிழ் தாள் எளிதாக இருந்தாக மாணவர்களும், ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று (ஏப்ரல் 6) தொடங்கியது. முதல் தேர்வாக தமிழ் மொழித் தாளுக்கான தேர்வு இன்று நடைபெற்றது. இன்று தொடங்கியுள்ள தேர்வு ஏப்ரல் 20 ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வுடன் முடிவடையும்.
இதையும் படியுங்கள்: 6- 9 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு; பள்ளிக் கல்வித் துறை
தமிழகத்தில் 9,76,000 பேர் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதுகின்றனர். இதற்காக சுமார் 4000 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல் நாளான இன்று தமிழ் மொழித் தாள் தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு எளிதாக இருந்ததாக கூறுகின்றனர். அனைத்து கேள்விகளும் சிலபஸிருந்து இடம்பெற்றிருந்தன, அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க முடிந்த அளவில் எளிதாக கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன, ஏற்கனவே படித்திருந்த கேள்விகள் தான் இடம்பெற்றிருந்தன, சிறப்பாக தேர்வு எழுதியுள்ளோம் என்றும் மாணவர்கள் கூறினர். கேள்வித் தாளை பார்த்த தமிழாசிரியர்கள் வினாக்கள் எளிமையாக கேட்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
இதனிடையே 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் முதல் நாளான இன்று 960 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil