தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. தகுதி உள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள வட்டார கல்வி அலுவலர் (Block Educational Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி தேதி 05.07.2023.
இதையும் படியுங்கள்: அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!
வட்டார கல்வி அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 33
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் B.Ed படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.07.2023 அன்று 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயதுத் தளர்வு: அரசு விதிகளின்படி SC/ST/ BC/MBC/ BCM/DNC பிரிவுகளுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு உண்டு. மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு.
சம்பளம் : ரூ. 36,900 – 1,16,600
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 30 கேள்விகள் 50 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். தகுதி மதிப்பெண் 20.
இரண்டாம் பகுதியில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் 110 வினாக்கள், கல்வியியலில் 30 வினாக்கள், பொது அறிவில் 10 வினாக்கள் என மொத்தம் 150 வினாக்கள் இடம்பெறும். தேர்வு மூன்று மணி நேரம் நடைபெறும். எழுத்துத் தேர்வு கணினி மூலம் நடத்தப்படும்.
குறைந்தப்பட்ச தகுதி மதிப்பெண்கள் : 50%, SC/SCA பிரிவுகளுக்கு 45%, ST பிரிவுக்கு 40%
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://trb1.ucanapply.com/apply_now என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.600
SC/ST பிரிவுகளுக்கு ரூ.300
விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.07.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://trb.tn.gov.in/admin/pdf/1487356732BEO%20NOTIFICATION%20MERGED%2005.06.2023.pdf என்ற இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil