/tamil-ie/media/media_files/uploads/2022/10/tet-exam.jpg)
டி.என்.பி.எஸ்.சி தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வுக்கு, இனி 42 வயதை கடந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. இதில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 58 வயதை நிரம்பாதவர்கள் முதுகலை ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர். பின்னர் கல்வித்துறையில் சீர்திருத்தங்களை கொண்டு வரும் வகையில் பொது பிரிவுக்கு 40 வயதும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 45 வயதும் வரம்பாக நிர்ணயிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: UPSC Exam: இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு, பிரவாசி பாரதிய திவாஸ், பண மதிப்பிழப்பு… முக்கிய டாபிக்ஸ் இங்கே!
இந்தநிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டில் பரவிய கொரோனா மற்றும் அதன் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால், ஆசிரியர் தேர்வு நடத்தப்படவில்லை. இதனால் ஏராளமானோர் ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வயதுத் தகுதியை இழந்தனர்.
இந்த நிலையில் ஆசிரியர் கல்வி முடித்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த 2021 ஆம் ஆண்டு சிறப்பு அனுமதியாக ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 45 ஆக உயர்த்தப்பட்டது. அதே போல இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பு 50 ஆக உயர்த்தப்பட்டது.
இந்த வயது வரம்புக்கான சிறப்பு அனுமதி 2022 டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் இனி ஆசிரியர் தேர்வுக்கு பொது பிரிவில் 42 வயது கடந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. அதே போல இட ஒதுக்கீடு பிரிவில் 47 வயது எட்டியவர்கள் விண்ணப்பிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை 2023 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.