Advertisment

TRB Recruitment; வந்துவிட்டது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பு! உடனே அப்ளை பண்ணுங்க!

Tamilnadu Teacher recruitment board release notification on 2207 vacancies: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 2,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி பயிற்றுனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
TRB Recruitment; வந்துவிட்டது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பு! உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 2,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி பயிற்றுனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி பயிற்றுனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி தேதி 17.10.2021

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 2,207

பிரிவு வாரியாக காலியிடங்களின் எண்ணிக்கை

தமிழ் : 300

ஆங்கிலம் : 219

கணிதம் : 142

இயற்பியல் : 117

வேதியியல் : 223

தாவரவியல் : 112

விலங்கியல் : 121

வணிகவியல் : 331

பொருளாதாரம் : 368

வரலாறு : 129

புவியியல் : 17

அரசியல் அறிவியல் : 22

வீட்டு அறிவியல் : 5

உயிர் வேதியியல் : 2

இந்திய கலாச்சாரம் : 4

உடற்கல்வி இயக்குனர் : 42

கணினி பயிற்றுனர் : 44

தெலுங்கு : 3

கன்னடம் : 2

உருது : 4

வயதுத் தகுதி: 01.07.2021 அன்று 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயதுத் தளர்வு : அரசு விதிகளின்படி SC/ST/BC/MBC/BCM/DNC பிரிவுகளுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு உண்டு. மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு.

கல்வித் தகுதி :

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் B.Ed படித்திருக்க வேண்டும்.

உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களுக்கு B.P.Ed படிப்பில் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கணினி பயிற்றுனர் பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு அல்லது எம்.இ, எம்.டெக் படிப்புகளில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் B.Ed படித்திருக்க வேண்டும்.

கூடுதல் தகுதிகள் : தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500

SC/ST பிரிவுகளுக்கு ரூ.250

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் 110 வினாக்கள், கல்வியியலில் 30 வினாக்கள், பொது அறிவில் 10 வினாக்கள் என மொத்தம் 150 வினாக்கள் இடம்பெறும்.

தேர்வு மூன்று மணி நேரம் நடைபெறும். எழுத்துத் தேர்வு கணினி மூலம் நடத்தப்படும்.

குறைந்தப்பட்ச தகுதி மதிப்பெண்கள் : 50%, SC/SCA பிரிவுகளுக்கு 45%, ST பிரிவுக்கு 40%

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://trb.tn.nic.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்

ஆன்லைன் விண்ணப்பம் ஆரம்பிக்கும் தேதி : 16.09.2021

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.10.2021

தேர்வு நடைபெறும் தேதிகள் : 13.11.2021, 14.11.2021, 15.11.2021

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://trb.tn.nic.in/pg2021/Notification.pdf என்ற இணையதளப்பக்கத்தினை பார்வையிடவும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Teachers Jobs Trb Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment