ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளை எழுதும் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களைச் சரிபார்க்க ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்பு முறையை அறிமுகப்படுத்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்கள் முதல் உதவிப் பேராசிரியர்கள் வரையிலான பணி நியமனங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுகளை நடத்தி வருகிறது.
இந்தத் தேர்வுகளுக்கான விண்ணப்பப் பதிவு ஆன்லைன் முறையில் நடைபெற்று வருகிறது. மேலும் தேர்வுகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் நடத்தப்படுகிறது. ஆன்லைன் அல்லது நேரடி தேர்வுகளுக்குப் பிறகு, ஆசிரியர் தேர்வு வாரியம் விண்ணப்பதாரர்களின் இறுதி விடைகள் மற்றும் மதிப்பெண்களை வெளியிடுகிறது. மதிப்பெண்களை வெளியிட்ட பிறகு, விண்ணப்பதாரர்களின் தகுதிக்கு ஏற்ப பொதுத் தகுதிப் பட்டியலைத் தயாரிக்க வேண்டும். அதன்படி, வகுப்புவாரி இடஒதுக்கீடு விதிமுறைகளைப் பின்பற்றி பொதுத் தகுதிப் பட்டியலில் இருந்து சான்றிதழ் சரிபார்ப்புப் பட்டியல்கள் தயாரிக்கப்பட வேண்டும்.
இந்தநிலையில், ஆன்லைன் முறையில் மேலும் துல்லியத்தைக் கொண்டு முயற்சியாக, பல்வேறு தேர்வுகளை எழுதும் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களைச் சரிபார்க்க பிரத்யேக ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்பு முறையை அறிமுகப்படுத்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது என டி.டி நெக்ஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய சான்றிதழ் சரிபார்ப்பு போர்டல் இரண்டு சரிபார்ப்பு செயல்முறைகளைக் கொண்டிருக்கும், ஒன்று பதிவேற்றிய ஆவணங்களை ஆன்லைனில் சரிபார்ப்பது, மற்றொன்று ஆசிரியர் தேர்வு வாரிய ஊழியர்களால் நேரடியாக சரிபார்ப்பது என்று உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சான்றிதழ் சரிபார்ப்பு செயல்முறை முடிந்ததும், போர்ட்டல் ஒவ்வொரு தேர்வரின் தகுதியையும் அவர்களின் சாதி, தகுதிகள் மற்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முன்னுரிமை நிபந்தனைகளுக்கு ஏற்ப தனித்தனியாக மதிப்பீடு செய்யும். ஆன்லைன் முறையின் மூலம் சாதி வாரியான இடஒதுக்கீட்டைப் பின்பற்றி, சான்றிதழ் சரிபார்ப்புத் தகுதிப் பட்டியலில் இருந்து தற்காலிகத் தேர்வுப் பட்டியல்கள் தயாரிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து விண்ணப்பதாரர்களின் தரவுகளும் சான்றிதழ் சரிபார்ப்பு போர்ட்டலுடன் இணைக்கப்படும். இது நான்கு பேனல்களைக் கொண்டிருக்கும் - சரிபார்ப்பு, நேரடி அறிக்கை டாஷ்போர்டு, நிர்வாக குழு மற்றும் சூப்பர் அட்மின் குழு (கிளியர் செய்யும் அதிகாரிகள்). சான்றிதழ் சரிபார்ப்பு போர்டல்/சிஸ்டம் இன்ட்ராநெட் சர்வர் மூலம் அணுகப்படும். இந்த அமைப்பு ஆறு மாதங்களில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.