2023-2024 ஆம் ஆண்டிற்கான இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஆசிரியர் தேர்வு முடிவுகள் மற்றும் வினாத்தாளின் விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
2023-2024 ஆம் ஆண்டிற்கான இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை 6.01/2024, 09.02.2024- 21.07.2024 அங்கீகாரம் (Optical Mark Recognition (OMR) மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் 25,319 தேர்வர்கள் கலந்து கொண்டனர்.
மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண்: WMP No.16353 of 2024 and batch cases : 18.03.2025 ற்கிணங்க, மேற்காணும் போட்டித் தேர்வில், Part. B-ல் தமிழ் மொழி வினாக்கள் கொண்ட "A" வகை வினாத்தாளுக்குரிய கேள்விகளுக்கான தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative Answer Key) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trh.tn.gov.in- 28. 03. 2025 அன்று Objection Tracker உடன் வெளியிடப்பட்டது.
தற்காலிக விடைக்குறிப்பிற்கு 28. 03. 2025 முதல் 03.04.2025 பிற்பகல் 5.00 மணி வரை தேர்வர்கள் இணையவழியில் தங்களது. ஆட்சேபணைகளை (Objections) தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் மேற்காண் தேதிகளில் பெறப்பட்ட அனைத்து ஆட்சேபணைகளையும் பாடவாரியாக வல்லுநர்குழு அமைக்கப்பட்டு முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வுக்குப்பின் பாட வல்லுநர்கள் குழுவால் இறுதி செய்யப்பட்ட விடைக்குறிப்புகளின் அடிப்படையில் Part B ல் தமிழ் மொழி வினாக்கள் கொண்ட வினாத்தாளினை எழுதிய தேர்வர்களது OMR விடைத்தாளினை கணினிமயமாக்கப்பட்ட மின்னணு செயல்முறை (Computerised electrotics process) மூலம் மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன.
https://trb.tn.gov.in/more_notification_details.php?id=MN-868&language=LG-1
தற்பொழுது இத்தேர்வில், Part B-ல் தமிழ் மொழி வினாக்கள் கொண்ட வினாத்தாளினை எழுதிய அனைத்து தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இறுதி விடைக்குறிப்புடன் இன்று வெளியிடப்படுகிறது. மேலும், பாடவல்லுநர்களின் முடிவே இறுதியானது என்று அறிவிக்கப்படுகின்றது. மேற்கொண்டு எவ்வித ஆட்சேபணைகளையும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்க இயலாது பாட வல்லுனர்களின் முடிவே இறுதியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.