New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/09/jobs.jpg)
Tamilnadu Job Update : தென்காசி மாவட்டத்தில் சமூக நல அலுவலக காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Tamil Job Vacancy Update : தென்காசி மாவட்டத்தில் சமூக நல அலுவகத்தில் காலி பணியிடங்களை நிரப்புவம் வகையில் வேலைவாய்ப்பு குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மூத்த ஆலோசகர் மைய நிர்வாகி, ஐ.டி.பணியாளர், பல்நோக்கு உதவியாளர் மற்றும் ஓட்டுநர் என மொத்தம் 7 காலியிடங்களை நிரப்ப விண்ணப்படங்கள் வரவேற்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு வரும் செப்டம்பர் 10-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
மைய நிர்வாகி
காலியிடம் – 1
மாத சம்பளம் – 30,000
தகுதி : சமூகப்பணி உளவியல் அல்லது சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மூத்த ஆலோசகர்
காலியிடம் – 1
மாத சம்பளம் – 20,000
தகுதி : சமூகப்பணி உளவியல் அல்லது சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஐ.டி.பணியாளர்
காலியிடம் – 1
மாத சம்பளம் – 18,000
தகுதி : கணினி அறிவியல் பிரிவு அல்லது பொறியியல் துறையில் பட்டம் பெறிருக்க வேண்டும். தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வழக்கு பணியாளர்
காலியிடம் -1
மாத சம்பளம் – 12,000
தகுதி : சமூகப்பணி மற்றும் உளவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஓட்டுநர் மற்றும் இரவு காவலர்
காலியிடம் - 1
மாத சம்பளம் – 10,000
தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பல்நோக்கு உதவியாளர்
காலியிடம் – 1
மாத சம்பளம் – 6,400
தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதுடன் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தகுதி மற்றும் பணி அனுபவங்களின் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலகம். சகி ஒருங்கிணைந்த சேவை மையம் தென்காசி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் செப்டம்பர் 10-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களைப் பெற www.Tenkasi.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தை சரிபார்க்கவும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.