/indian-express-tamil/media/media_files/2025/10/30/thanga-2025-10-30-10-16-33.jpg)
மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழவை முன்னிட்டு வரும் நவம்பர் 1-ந் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில், மழையின் தீவிரத்தை பொறுத்து மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்து இருந்தது. மேலும் மாவட்டங்களில் முக்கிய கோயில் திருவிழக்கள் உள்ளிட முக்கியமான விஷேச தினங்கள் மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளிப்பது வழக்கம்.
அந்த வகையில் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040ஆவது சதய விழா வரும் 31ம் தேதி (வெள்ளிக் கிழமை) மற்றும் நவம்பர் 1ம் தேதி (சனிக்கிழமை) என 2 நாட்கள் தஞ்சைப் பெரியகோயில் வளாகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் நவம்பர் 1ம் தேதி பொது விடுமுறை அறிவித்து ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.
அதாவது அன்றைய தினம் (நவ.1 சனிக்கிழமை) பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தஞ்சாவூர் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us
 Follow Us