Advertisment

இந்து அறநிலையத்துறை வேலை... 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும் : விண்ணப்பிப்பது எப்படி?

சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இளநிலை உதவியார், ஓட்டுநர், நுலகர், உதவி மின் பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

author-image
WebDesk
New Update
Mayilpore

சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை சார்பில் புதிய வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிட்ப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் குறைந்தபட்ச கல்வித்தகுதி 8-ம் வகுப்புவரை படித்திருந்தால் போதுமானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாக இருக்கும் சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிட்பபட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் இளநிலை உதவியார், ஓட்டுநர், நுலகர், உதவி மின் பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இந்த வேலை வாய்ப்புக்கு தகுதியும், விரும்பமும் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பிக்கும் கடைசி தேதி வரும் ஜனவரி 27-ந் தேதி மாலை5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காலி பணியிட விபரம் மற்றும் சம்பளம்

இளநிலை உதவியாளர் – 1

கல்வித்தகுதி – 8-ம் வகுப்பு தேர்ச்சி (அ) அரசாங்கத்தில் அங்கீகாரித்த அதற்கு இணையான கல்வித்தகுதி

சம்பள விபரம் – 15,900 முதல் 50,400 வரை

ஓட்டுநர் – 1

கல்வித்தகுதி - 8-ம் வகுப்பு தேர்ச்சி (அ) அரசாங்கத்தில் அங்கீகாரித்த அதற்கு இணையான கல்வித்தகுதி. இலக்கு ரக வாகனம் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் கட்டாயம்.

சம்பள விபரம் : 18,500 முதல் 58,600 வரை

நுலகர் – 1

கல்வித்தகுதி – 10-ம் வகுப்பு தேர்ச்சி (அ) அதற்கு சமமான அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வித்தகுதி. நூலக அறிவியலில் பட்டயம் பெற்றிருப்பது அவசியம்.

சம்பள விபரம் – 18,500 முதல் 58,600 வரை

உதவி மின் பணியாளர் – 1

கல்வித்தகுதி – மின்கம்பி பணியாளர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மின் உரிமை வழங்கல் வாரியத்திடம் இருந்து எச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விபரம் – 16,600 முதல் 52,400 வரை

விண்ணப்பிக்கும் முறை :

mylaikapaleeswarar.hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ‘’இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு கபாலீசுவரர், திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை-4’’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஆகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Hindu Temple tamilnad
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment