Tamilnadu TNPSC Exam Update : தமிழகத்தில் அரசு வேலை கிடைக்க வேண்டும் என்றால், டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டாயம். இந்த தேர்வுக்காக பல லட்சக்கணக்காக மாணவர்கள் தனியார் நிறுவன ஊழியர்கள் என பலரும் இரவு பகல் பாராது படித்து தேர்வுக்கு தயாராகி வருகினறனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்டு வரும் இந்த தேர்வு குருப் 1 குருப் 2 குருப் 4 என பல வகைகளில் நடத்தப்படுகிறது.
இநநிலையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்படவில்லை. இதனால் தேர்வுக்கு தயாராகி வந்த பலரும் ஏமாற்றமடைந்தாலும், அடுத்த வருடம் நடைபெறும் தேர்வுககாக தயாராகி வருகினறனர். இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் அடுத்த வருடத்திற்கான திட்ட அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
இந்த திட்ட அறிக்கையில் குருப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த வருடம் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்றும், அறிவிப்பு வெளியான அடுத்த 75 நாட்களில் தேர்வு நடைபெறும் என்றும் அறிவித்தார். மேலும் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் தற்போது பணியில் இல்லை என்றும், இனிமேல் முறைகேடுகள் நடக்காமல் தடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தேர்வு தொடர்பாக அறவிப்பை வெளியிட்ட அவர், தேர்வு எழுதும் அனைவரும் தமிழ் தாளில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும், அவ்வாறு தேர்ச்சி பெற்றால் மட்டுமே தேர்வு எழுதியவரின் மற்ற தாள்கள் திருத்தப்படும் என்றும், தமிழில் தேர்ச்சி பெறவில்லை என்றால் மற்ற தாள்கள் திருத்தப்படாது என்றும் கூறிப்பிட்டிருந்தார். தமிழக வேலைவாய்ப்பு முழுவதும் தமிழர்களுக்கே கிடைக்கும் வகையில் இ்ந்த புதிய விதி அமல்படுத்தப்பட்டுளளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
குருப் 4 மற்றும் விஏஓ தேர்வுகள்
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் அதிக மாணவவர்கள் எழுதும் தேர்வு குருப் 4 மற்றும் விஏஓ. கடந்த ஆண்டு தேர்வு நடைபெறாத காரணத்தால் அடுத்து வரும் தேர்வுகளில் அதிக மாணவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குருப் 4 பதவிகள்
குருப் 4 தேர்வில், தேர்ச்சி பெற்றால், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கு எழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரி தண்டலர், நில அளவர், வரையாளர் உள்ளிட்ட 7 பதவிகள் பெற முடியும்.
கல்வித்தகுதி
குருப் 4 மற்றும் விஏஓ தேர்வுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
வயது தகுதி
குருப் 4 தேர்வில் 18 வயது முதல் 30 வயதுவரை உள்ள அனைவரும் பங்கேற்றகலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் நில சலுகைககள் உண்டு.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.