டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின் தேர்வு வரும் பிப்ரவரி 25-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்விற்கு கடைசி நேரத்தில் தயாராவது எப்படி என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். பல வகைகளில் நடத்தப்படும் இந்த தேர்தவில் ஒரு சில பணியிடங்களுக்கு மெயின் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தப்படும். அந்த வகையில் தற்போது குரூப் 2 மெயின் தேர்வு நாளை மறுநாள் (பிப் 25) தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 21-ந் தேதி குரூப் 2 தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில் 58 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்று குரூப் 2 மெயின் தேர்விற்கு தகுதி பெற்றனர். அந்த வகையில் வரும் பிப்ரவரி 25-ந் தேதி நடைபெற உள்ள மெயின் தேர்வுக்காக தேர்வர்கள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
மேலும் இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட் கடந்த பிப்ரவரி 16-ந் தேதி வெளியிடப்பட்டது. இதனிடையே குரூப் 2 தேர்வுக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், தேர்வர்கள் கடைசி நேரத்தில் எவ்வாறு தயாராக வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.
இதில், குரூப் 2 மெயின் தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெறும். ஆனாலும் நீங்கள் காலை 9. மணிக்கு தேர்வு மையத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இருக்க வேண்டும். உங்களது தேர்வு மையத்திற்கு போக்குவரத்து அதிகம் இல்லை என்றால் நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அதாவது 8.30 மணிக்கு அங்கு சென்றடைவது சரியாக இருக்கும்.
9. மணிக்கு உள்ளே சென்றால் தான் ரிலாக்ஸாக இருக்கும் கடைசி நிமிடத்தில் உள்ளே சென்று பதட்டமடைய வேண்டாம். 9 மணிக்கு உள்ளே சென்று தேர்வு எழுதுவதற்கு முன் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் நிதானமாக செய்துவிட்டு ரிலாக்ஸாக தேர்வு எழுதலாம். அதேபோல் நீங்கள் சாப்பிட்டு விட்டு தான் தேர்வுக்கு செல்ல வேண்டும். நிறையபேர் சாப்பிடாமல் சென்றுவிடுகிறார். அப்படி செய்யக்கூடாது. அதற்காக அதிகமாகவும் சாப்பிடக்கூடாது. எண்ணை உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
தேர்வு எழுதும் போது பதட்டம் அடையாமல் ரொம்ப ரிலாக்ஸாக இருக்க வேண்டும். கேள்வித்தாள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். கேள்விகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும் எளிதாக இருந்தாலும் அது நமக்கு மட்டும் அல்ல அனைவருக்கும்தான். அதனால் எதைப்பற்றியும் கவலைப்படாடல் தேர்வு எழுதும் 3 மணி நேரத்தில் நமது சிறந்த பதிலை எப்படி கொடுக்க வேண்டும் என்பதை நினைத்து தேர்வு எழுதுங்கள்.
6 மார்க் 12 மார்க் 15 மார்க் என 3 வகை கேள்விகள் உள்ளன. இதில் எதிலுமே அதிக நேரம் எடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் தேர்வு எழுத தொடங்கியதில் இருந்து முடிக்கும்வரை ஒரே மாதிரி இருக்க வேண்டும். தெரிந்த கேள்வி தெரியாத கேள்வி என்று இல்லாமல் அனைத்தையும் ஒரே மாதிரி எழுதுங்கள்.
அதேபோல் 12 மார்க் மற்றும் 15 மார்க் கேள்விகளுக்கு அதிகமான சப்-ஹெட்டிங் எழுத வேண்டும். அடுத்து தகுதித்தேர்வு. இந்த தேர்வை நினைத்து பலரும் பயப்படுகிறார்கள். ஆனால் இதில் பயப்பட ஒன்றும் இல்லை. தமிழக மாணவர்களே வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான் கட்டாய தமிழ் தேர்வு வைத்திருக்கிறார்கள். எளிமையான முறையில் இருக்கும் தைரியமாக எழுதுங்கள்.
3 மணி நேர தேர்வில் என்ன எழுதுகிறீர்களே அதை வைத்துத்தான் உங்களுக்கு வேலை கிடைக்கும். அதனால் எதையும் சிம்பிளா எழுதுவது விரிவாக எழுதாமல் இருப்பது போன்ற செயல்களை செய்யாதீர்கள். ஒவ்வொரு மார்க்குக்கும் கடைசிவரை போராட வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். முதலில் ஒருசில கேள்விகளை விட்டு விட்டு பின்னாடி எழுதலாம் என்று சென்றுவிடுவார்கள் கடைசியில் அதை எழுத நேரம் இல்லாமல் போகும். அவ்வாறு செய்ய வேண்டாம்.
நல்லா தெரிந்த முக்கியமான பதிலை முதலில் எழுதுங்கள். தெரியாத கேள்விகள் இருந்தால் பதட்டமடைய வேண்டாம். அந்த கேள்விகளை எப்படி சமாளிக்க முடியும் என்பதை யோசித்து செயல்பட வேண்டும். அதேபோல் நீங்கள் பயன்படுத்தும் பேனா 4 அல்லது 5 எடுத்துச்செல்லுங்கள். பேனாவும் ஹால்டிக்கெட்டும் மெயின். அதை சரியாக எடுத்துச்செல்ல வேண்டும்.
தேர்வுக்கு செல்லும்போது நண்பர்களுடன் எதையும் டிஸ்கஸ் செய்ய வேண்டாம். ஏனென்றால் அவர் புதிதாக எதாவது ஒரு டாபிக் சொல்லி அது நமக்கு தெரியாமல் போனால் பதட்டமாகிவிடும். படித்த கேள்வி மட்டுமல்லாமல் படிக்காத கேள்வியையும் நம்மால் சமாளிக்க முடியும் என்ற எண்ணத்தில் தேர்வுக்கு செல்லுங்கள். முடிந்தவரை கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் எழுதுங்கள்.
மேலும் ஒவ்வொரு கேள்விக்கும் சப் ஹெட்டிங் ஞாபகம் இருந்தாலே நாம் முழுமையாக பதில் கொடுத்துவிடலாம். அதை மனதில் வைத்துக்கொண்டு தேர்வுக்கு செல்லும் முன் ரிவிஷன் செய்யலாம். கடைசி நாளில் உங்களுக்கு நன்றாக தெரிந்த பாடத்தை மட்டும் படித்துவிட்டு செல்லுங்கள். சரியாக தெரியா அல்லது புதிதாக எதையும் படிக்காதீர்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.