தமிழ்நாடு சிறைத்துறையில் காலியாக உள்ள உதவி ஜெயிலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வு நடத்தி பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் சிறையில் காலியாக உள்ள 59 உதவி ஜெயிலர் பணியிடங்களுக்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விபரங்கள் :
தமிழகத்தில் உள்ள சிறைகளில் உதலி ஜெயிலர் பணி - காலியிடங்கள் 59. இதில் ஆண்கள் 54 மற்றும் பெண்கள் 5
சம்பள விபரம்
லெவல் 11- வரைமுறையின்படி 35,400-ல் தொடங்கி 1,30,400 வரை சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி
இந்த உதவி ஜெயிலர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 12-ம் வகுப்பு அல்லது பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
குறைந்தபட்சம் 18-வயது முதல் 32 வயது நிரம்பியிருக்க வேண்டும். எஸ்.சி. எஸ்சி(ஏ), எம்.பி.சி., டிசி, பிசி, பிசிஎம் பிரிவை சேர்ந்தவர்கள் மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை :
டிஎன்பிஎஸ்சி உதவி ஜெயிலர் பணிக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
கட்டண விபரம்
எஸ்.சி. எஸ்சி(ஏ), எம்.பி.சி., டிசி, பிசி, பிசிஎம் வகுப்பை சேர்ந்தவர்கள் கணவனை இழந்த பெண்கள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கட்டணம் கிடையாது. பிற பிரிவினருக்கு ரூ100 கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க தொடங்கிய தேதி - ஏப்ரல் 12, 2023
விண்ணப்பிக்க கடைசி தேதி - மே 11 2023
தேர்வு தேதி - ஜூலை 1, 2023
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“