தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 8 மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 346 பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள் விபரம்
மொத்த காலி இடங்கள் : 346 (டிப்ளமோ பிரிவில் 177, டிகிரி பிரிவில் 169)
சென்னையில் 44, விழுப்புரத்தில் 96, கும்பகோணம் 83, சேலம் 29, மதுரை 26, திண்டுக்கல் 23, தர்மபுரி 23, விருதுநகர் 22 என 8 மண்டலங்களில் 346 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வித்தகுதி
மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் பிரிவில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படஉள்ளதால், விண்ணப்பதாரர்கள் என்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். 2020 –ல் இருந்து 2022 வரையான காலகட்டத்தில் முதல் நிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
சம்பள விபரம்
இந்த பணியிடங்கள் அப்ரண்டீஸ் முறையில் நிரப்பப்பட உள்ளதால் டிகிரி முடித்தவர்களுக்கு ரூ9000 மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ 8000 சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது தகுதி
அப்ரண்டீஸ் விதிமுறைபடி வயது தகுதி எடுத்துக்கொள்ளப்படும். இந்த தேர்தவில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு உதவித்தொகையுடன் ஓராண்டு பயிற்சி வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த தேர்வுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் முதலில் www.mhrdnats.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டியது அவசியம். அதன்பின் வரும் டிசம்பர் 18-ந் தேதிக்குள் இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பம் செய்தவர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“