12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிந்துவிட்ட நிலையில், அடுத்து அவர்கள் எதிர்நோக்கும் கல்லூரி படிப்புக்காக தமிழகத்தில் சிறந்த பொறியியல் கல்லூரிகளின் தொகுப்பை பார்ப்போம்.
பள்ளி படிப்பை முடித்த மாணவர்கள் அடுத்து கல்லூரி படிப்பை தொடர எந்த கல்லூரியில் சேரலாம் என்று யோசித்துக்கொண்டிருப்பார்கள். இதில் பெரும்பாலான மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளை தேர்வு செய்வது ஆண்டுதோறும் நடந்து வரும் நிகழ்வு. பொறியியல் பட்டபடிப்பில் சேர்வதற்கு கவுன்சிலிங் கட்ஆப் மார்க் என பல கட்டங்களை கடக்க வேண்டும்.
மாணவர்கள் பலரும் தங்களுக்கு அருகில் உள்ள கல்லூரிகளை தேர்வு செய்ய நினைப்பதும், இன்னும் பல மாணவர்கள் வெளியில் நகர பகுதிகளில் உள்ள கல்லூரிகளை தேர்வு செய்ய நினைப்பார்கள். இந்த மாதிரியான யோசனையில் உள்ள மாணவர்களுக்கும், எஸ்.சி மாணவர்களின் கட்ஆப் மதிப்பெண்களுக்கு வசதியாக தமிழகம் உள்ள சிறந்த கல்லூரிகளை பார்ப்போம்.
கட்ஆப் மதிப்பெண் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்தால் அண்ணா பல்கலைகழகத்தின் சி.இ.ஜி வளாகத்தில் பொறியியல் சீட் பெறலாம். ஆனால் எஸ்.சி மாணவர்கள் 170 கட்ஆப் மதிப்பெண்கள் எடுத்தலே இந்த சி.இ.ஜி வளாகத்தில் ஏதாவது ஒரு பொறியியல் சீட் கிடைத்துவிடும். அதன்மூலம் இந்த ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள் தங்களது கட்ஆப் மதிப்பெண்கள் 160-165 வரை இருந்தால் சி.இ.ஜி வளாகத்தில் சீட் கிடைக்கும். ஆனால் இ.சி.இ துறை வேண்டும் என்றால் 194 கட்ஆப் மதிப்பெண் இருக்க வேண்டும்
பிஎஸ்ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் எஸ்.சி பிரிவினரின் கட்ஆப் மதிப்பெண் 198. குறைந்தபட்ச கட்ஆப் மதிப்பெண் 126.50. இதன் மூலம் எஸ்.சி பிரிவு மாணவர்கள் கட்ஆப் 125 மதிப்பெண்கள் எடுத்தாலே அவர்களுக்கு பி.இ அல்லது பி.டெக் படிபபுக்கான சீட் கிடைக்கும். ஆனால் இ.சி.இ துறை வேண்டும் என்றால் 185 கட்ஆப் மதிப்பெண் இருக்க வேண்டும். இது எஸ்.சி.பிரிவு மாணவர்களுக்கான கடைசி கட்ஆப்.
தியாகராஜர் காலேஜ் ஆப் இஞ்சினியரிங் கல்லூரியில் எஸ்.சி பிரிவினரின் அதிகபட்ச கட்ஆப் மதிப்பெண் 197.50. அதே சமயம் குறைந்தபட்ச கட்ஆப் மதிப்பெண் 146.50. எஸ்.சி பிரிவு மாணவர்கள் 146 கட்ஆப் மதிப்பெண்கள் வைத்திருந்தால் இந்த கல்லூரியில் எதாவது ஒரு துறையில் சீட் கிடைக்கும். அதே சமயம் இசிஇ துறை வேண்டும் என்றால் 183.50 கட்ஆப் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
டயர் 3 கல்லூரிகளில் ஒன்றில் 197.50 கட்ஆப் மதிண்பெண் பெற்ற ஒரு எஸ்.சி பிரிவு மாணவர் சேர்ந்துள்ளார். அதே போல் இந்த கல்லூரியின் கடைசி கட்ஆப் 82.50. இது எஸ்.சி பிரிவில் கடைசியாக சேர்ந்த மாணவரின் கட்ஆப். இந்த கல்லூரியில் இன்னும் எஸ்.சி பிரிவு மாணவர்களுக்காக பல இடங்கள் காலியாக உள்ளது. பெரிய கட்ஆப் மதிப்பெண்கள் எடுத்து அண்ணா பல்கலைகழகத்தில் சீட் கிடைக்கும் வாய்ப்பு இருந்தும் இந்த டயர் 3 கல்லூரியில் ஏன் சேர்கிறார்கள் என்று பார்த்தால், அவர்களிடம் விழிப்புணர்வு மிக மிக குறைவாக உள்ளது.
அண்ணா பல்கலைகழகத்தின் எம்ஐடி கேம்பஸில், படிக்க கட்ஆப் மதிப்பெண் 197. குறைந்த பட்ச கட்ஆப் மதிப்பெண் 157. சிவசுப்பிரமணிய நாடார் கல்லூரியில் எஸ்சி. பிரிவு மாணவர்களுக்கான அதிகபட்ச கட்ஆப் 195.5. குறைந்த பட்ச கட்ஆப் 165.50. அடுத்து டயர் 5 வகை கல்லூரி ஒன்றில் எஸ்.சி பிரிவு மாணவர் ஒருவர் சேர்ந்த அதிகபட்ச கட்ஆப் மதிப்பெண் 194.46 குறைந்தபட்ச கட்ஆப் மதிப்பெண் 80.00.
கட்ஆப் மதிப்பெண்கள் அதிகம் வைத்திருக்கும் எஸ்.சி.பிரிவு மாணவர்கள் அண்ணா பல்கலைகழகத்தில் சீட் கிடைக்கு என்ற நிலை இருந்தாலும் அவர்கள் அதிக மாணவர்கள் சேராத டயர் 3 அல்லது டயர் 5 வகை கல்லூரிகளை தேர்வு செய்துவிடுகிறார்கள். இதனை தவிர்க்க முதலில் டாப் கல்லூரிகள் என்ன என்பதை வரிசைப்படுத்துங்கள். அதன்பிறகு எஸ்சி பிரிவினருக்கு கட்ஆப் மதிப்பெண்கள் என்ன என்பதை பார்த்து சேருங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil