சட்டப்படிப்பு படித்து சிறந்த வழக்கறிஞராகவோ, சிறந்த நீதிபதியாகவோ ஆக வேண்டும் என்பது பலரின் விருப்பம். சட்டப்படிப்பு படிக்க அகில இந்திய அளவில் கிளாட் (CLAT) நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதுதவிர தமிழக அரசு சட்டக்கல்லூரிகளில் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
ஆனால் அரசு சட்டக்கல்லூரிகளில் சேர 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் சதவீதத்தைக் கொண்டிருக்க வேண்டும். எனவே மதிப்பெண் குறைந்தவர்கள் தனியார் சட்டக்கல்லூரிகளில் சேர முயற்சிக்கலாம். தமிழகத்தில் உள்ள தனியார் சட்டக்கல்லூரிகளில் பெரும்பாலும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலே சேர்க்கை நடைபெறுகிறது. சில கல்லூரிகளில் மட்டுமே நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது.
இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள சிறந்த தனியார் சட்டக்கல்லூரிகள் எவை என்பதையும், சேர்க்கை விபரங்களையும் இப்போது பார்ப்போம்.
சாஸ்த்ரா பல்கலைக்கழக சட்டப்பள்ளி (Sastra University School of Law)
இங்கு பி.ஏ எல்.எல்.பி (ஹானர்ஸ்), பி.பி.ஏ எல்.எல்.பி (ஹானர்ஸ்), பி.காம் எல்.எல்.பி (ஹானர்ஸ்) போன்ற இளநிலை படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. சாஸ்த்ரா சட்டக்கல்லூரியில் கிளாட் தேர்வு மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது.
சவீதா சட்டப்பள்ளி (Saveetha School of Law)
இங்கு பி.ஏ எல்.எல்.பி (ஹானர்ஸ்), பி.பி.ஏ எல்.எல்.பி (ஹானர்ஸ்), பி.காம் எல்.எல்.பி (ஹானர்ஸ்) போன்ற இளநிலை படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
வி.ஐ.டி சட்டப்பள்ளி (VIT School of Law)
இங்கு பி.ஏ எல்.எல்.பி (ஹானர்ஸ்), பி.பி.ஏ எல்.எல்.பி (ஹானர்ஸ்) போன்ற இளநிலை படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு படிக்க இந்த கல்லூரி நடத்தும் நுழைவுத் தேர்வில் தகுதி பெற வேண்டும்.
எஸ்.ஆர்.எம் சட்டப்பள்ளி (SRM School of Law)
இங்கு பி.ஏ எல்.எல்.பி (ஹானர்ஸ்), பி.பி.ஏ எல்.எல்.பி (ஹானர்ஸ்), பி.காம் எல்.எல்.பி (ஹானர்ஸ்), எல்.எல்.பி (ஹானர்ஸ்) போன்ற இளநிலை படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சத்யபாமா சட்டப்பள்ளி (Sathyabama School of Law)
இங்கு பி.ஏ எல்.எல்.பி (ஹானர்ஸ்), பி.பி.ஏ எல்.எல்.பி (ஹானர்ஸ்), பி.காம் எல்.எல்.பி (ஹானர்ஸ்), எல்.எல்.பி போன்ற இளநிலை படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
க்ரசண்ட் சட்டப்பள்ளி (Crescent school of Law)
இங்கு பி.ஏ எல்.எல்.பி (ஹானர்ஸ்), பி.பி.ஏ எல்.எல்.பி (ஹானர்ஸ்), போன்ற இளநிலை படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.