Advertisment

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு; 15149 காலியிடங்களை நிரப்ப முடிவு

2023 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது?; 15149 காலியிடங்களை நிரப்புவதற்கான ஆண்டு திட்டத்தை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Anbumani request to re-conduct TNPSC Group-2 exam

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 15149 காலியிடங்களை நிரப்புவதற்காக 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில், ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) டிசம்பர் மாதத்தில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழக அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், கணினி பயிற்றுனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள், அரசு சட்டக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர் ஆகிய பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது.

இதையும் படியுங்கள்: வின்ஃபியூச்சர் பரிசு வென்ற சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர்; மலிவு விலை நீர் சுத்திகரிப்பு சாதனம் உருவாக்கியதற்காக விருது

இந்தநிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் 2023 ஆம் ஆண்டில் 9 தேர்வுகளை நடத்துவதன் மூலம் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள 15149 காலியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் 2023 ஆம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணையை இன்று (28.12.2022) வெளியிட்டுள்ளது.

ஆண்டுத் திட்டத்தின் படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4000 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு 2023 ஏப்ரல் மாதத்தில் நடைபெறும். வட்டார கல்வி அலுவலர் பதவிகளில் 23 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு மே 2023ல் நடைபெறும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு மே 2023ல் நடைபெறும். இதில் 6553 காலியிடங்கள் நிரப்பப்படும். பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு ஜூன் மாதத்தில் நடைபெறும். இதில் 3587 காலியிடங்கள் நிரப்பப்படும்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 493 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு 2023 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ளது.

அரசு பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 97 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு செப்டம்பர் 2023ல் நடைபெறவுள்ளது.

அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள 129 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ளது. 267 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நவம்பரில் நடத்தப்படும்.

2023 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) அறிவிப்பு டிசம்பரில் வெளியிடப்படும். இதற்கான தேர்வு 2024 மார்ச் மாதத்தில் நடத்தப்படும். இவ்வாறு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trb Exam Tet Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment