Advertisment

தமிழகத்தில் 10000 ஆசிரியர் பணியிடங்களுக்கு நியமனத் தேர்வு எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

தமிழகத்தில் 10000 ஆசிரியர் காலியிடங்களை நிரப்புவதற்கான நியமனத் தேர்வு; விரைவில் அறிவிப்பு வெளியாகும்; தேர்வுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tet

தமிழகத்தில் 10000 ஆசிரியர் காலியிடங்களை நிரப்புவதற்கான நியமனத் தேர்வு; விரைவில் அறிவிப்பு வெளியாகும்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலியிடங்களை நிரப்புவதற்கான நியமனத் தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நியமனத் தேர்வு அடிப்படையில் நியமனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆசிரியர் தகுதி தேர்வு எனப்படும் டெட் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு நியமனத் தேர்வு நடத்தி, அதன் அடிப்படையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

இதையும் படியுங்கள்: காந்தி மீதான இந்து தீவிரவாதிகளின் வெறுப்பு, ஆர்.எஸ்.எஸ் தடை; NCERT புத்தகங்களில் நீக்கம்

இந்தநிலையில், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 10000க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு விரைவில் நியமனத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

முன்னதாக, இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆண்டுத் திட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு மே 2023ல் நடைபெறும். இதில் 6553 காலியிடங்கள் நிரப்பப்படும். பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு ஜூன் மாதத்தில் நடைபெறும். இதில் 3587 காலியிடங்கள் நிரப்பப்படும், என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தாள் – 1 நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு தாள்- 2 ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. இதற்கான முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த தேர்வுகளில் தகுதி பெற்றோருக்கும், கடந்த 2012 ஆம் ஆண்டில் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கும் விரைவில் நியமனத் தேர்வு நடைபெற உள்ளது.

இந்தநிலையில், நியமனத் தேர்வுக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி 10000 ஆசிரியர் காலியிடங்களுக்கான நியமனத் தேர்வு குறித்த அறிவிப்பு மே மாதம் வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். அதே போன்று வட்டார கல்வி அலுவலர், கல்லூரி உதவி பேராசிரியர் ஆகிய பதவிகளுக்கான போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பு மே மாதம் அறிவு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trb Exam Tet Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment