திருச்சியில் மத்திய அரசு நிறுவன பணி… பொறியியல் பட்டதாரிகளுக்கு கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள்!

திருச்சியில் செயல்பட்டு வரும் ஆயுத தொழிற்சாலையில் தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

திருச்சியில் செயல்பட்டு வரும் ஆயுத தொழிற்சாலையில் தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.

பணியிடங்களுக்காக விபரம்.

பட்டதாரி  (Graduate Apprentice) மற்றும் டெக்னிக்கல் அப்ரண்டிஸ் (Technical Apprentice) (Diploma)

காலியிடங்கள்:  84

டெக்னிக்கல் அப்ரண்டிஸ் – 72

பட்டதாரி – 12

ஊக்கத்தொகை :

டெக்னிக்கல் அப்ரண்டிஸ் பணிக்கு பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதம் ரூ.3,542 வழங்கப்படும்.

பட்டதாரிகளுக்க மாதசம்பளம் ரூ4,984  வழங்கப்படும்

தகுதி:

பொறியியல் துறையில் மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்பியல், எலக்டரிக்கல் மறறும் எலக்ட்ரானிக்ஸ் ஆஃப் இன்ஸ்ட்ருமென்டேசன், கணினி பொறியில் போன்ற ஏதாவதொரு பிரிவுகளில் 3 ஆண்டு பட்டய படிப்பை முடித்திருக்க வேண்டும். பட்டதாரி பணிகளுக்கு 3 ஆண்டு பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

http://www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கான நேர்முகத் தேர்வு 01.10.2021 அன்று Ordinance Factory, (HRD Section), Trichy-620016, Ph: 0431-2581291: to 296 என்ற இடத்தில் நடைபெறும். மேலும் விவரங்கள் அறிய http://www.davp.nic.in/write Read Data/ADS/eng-10201-11-00-16-2122 என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu tricjy ordnance factory recruitment update

Next Story
TMB Jobs; தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com