தமிழக அரசின் வருவாய் துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் 2748 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
தமிழகத்தில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இதற்கான விளம்பரம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியிடப்பட வேண்டும். விண்ணப்பங்களை நவம்பர் 7 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலனை நவம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெறும். இதற்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 30 ஆம் தேதியும், நேர்காணல் டிசம்பர் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: சென்னை ஐ.ஐ.டி.,யில் வங்கி சார்ந்த படிப்புகள் அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
கிராம உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 2748
கல்வித் தகுதி : குறைந்தபட்சம் 5 ஆம் வகுப்பு தேர்ச்சியும், தமிழில் எழுத, படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : பொதுப்பிரிவினர் 21 முதல் 32 வயதிற்குள் இருக்க இதர பிரிவினர் 37 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ 11,100 – 35,100
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இந்தப் பணியிடங்களுக்கு அந்தந்த வட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எனவே உங்களுடைய மாவட்ட இணையதளப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-171 என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.11.2022
இது தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய அந்தந்த மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புகளைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil