Advertisment

வெலிங்டன் கண்டோன்மெண்ட் வேலை; 8-ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாட்டில் உள்ள வெலிங்டன் கண்டோன்மெண்ட் போர்டு வேலை வாய்ப்பு; 8 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, 12 ஆம் வகுப்பு மற்றும் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

author-image
WebDesk
New Update
வெலிங்டன் கண்டோன்மெண்ட் வேலை; 8-ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழகத்தில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் கண்டோன்மெண்ட் போர்டில், ஆய்வக நுட்புனர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 02.12.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Lab Technician

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் Diploma in medical Lab technology (DMLT) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 19,500 – 62,000

Secondary Grade Teacher

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் இளங்கலை கல்வியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 20,000 – 63,600

Mazdoor

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: ITI trade in Wireman / Fitter / Carpenter/ Plumber / Electrician / Mason course படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 19,500 – 62,000

Safaiwala

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,700 – 50,000

வயது தகுதி: 01.07.2022 அன்று 21 வயது முதல் 30 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://wellington.cantt.gov.in/recruitment/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி: cbwell.rect@gmail.com

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் எஸ்.சி/எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

மேலும் விவரங்களுக்கு https://wellington.cantt.gov.in/wp-content/uploads/sites/57/2022/10/RectNotice002.pdf மற்றும் https://wellington.cantt.gov.in/wp-content/uploads/sites/57/2022/11/RectNotice003.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment