தமிழ்நாடு அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 10 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 27.10.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: 3,147 புதிய பணியிடங்கள்; 20 மாநகராட்சிகளில் உருவாக்க தமிழக அரசு உத்தரவு
மைய நிர்வாகி (Centre Admisitrator)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகவியல்/ உளவியல் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 30,000
வழக்கு அலுவலர்கள் (Case Workers)
காலியிடங்களின் எண்ணிக்கை : 6
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகவியல் படிப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 15,000
பாதுகாப்பாளர் (Security Guard)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்பாளராக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 10,000
பன்முகப் பணியாளர் (Multi-Purpose Helper)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஏதேனும் அலுவலகத்தில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 6,400
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
முகவரி : மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8 ஆவது தளம், சிங்காரவேலன் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை – 600,001
விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.10.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2022/10/2022102099.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil