How to Apply for TANCA 2019 Exam Online: முதுகலை இஞ்ஜினியரிங் படிப்புகளான எம்.இ., எம்.டெக். படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்ப படிவம் (TANCA 2019 exam), அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://www.annauniv.edu/) வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள், எம்.இ., - எம்.டெக்., உள்ளிட்ட படிப்புகளுக்கு, வரும், 24ம் தேதி முதல், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
TANCA 2019 தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்
https://www.annauniv.edu/ இணையதளத்திற்கு செல்லவும்.
இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் TANCA 2019 என்ற லிங்கிற்கு செல்லவும்
கேட்கப்படும் விபரங்களை அளித்து லாகின் செய்யவும்
இதன்பின், விண்ணப்பதாரர்கள் புதிய பதிவுக்கணக்கு ஒன்றை துவங்கவேண்டும்.
அதில் கேட்கப்படும் விபரங்களை அளித்தபிறகு, தேவைப்படும் ஆவணங்களை அப்லோட் செய்யவும்.
பேமெண்ட் ஆப்சனை தேர்ந்தெடுத்து பணம் கட்டியவுடன் நடைமுறை நிறைவடையும்.
பின்வரும் படிவத்தை பிரின்ட் அவுட் எடுத்து, அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளவும்.
முக்கிய நாட்கள்
TANCA 2019 ஆன்லைன் விண்ணப்பம் துவங்கிய நாள் - ஜூலை 24, 2019
இறுதி நாள் - ஆகஸ்ட் 5, 2019
மாணவர்களின் மெரிட் பட்டியல் வெளியீடு - ஆகஸ்ட் 3வது வாரம்
TANCA 2019 கவுன்சிலிங் துவக்கம் - ஆகஸ்ட் இறுதி வாரம்
கல்வித்தகுதி
பி.இ., மற்றும் பி.டெக் பிரிவில் (பொதுப்பிரிவு மாணவர்கள்)50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி, மாணவர்கள் SC and ST பிரிவை சேர்ந்தவர்கள் என்றால் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி. இறுதியாண்டு படித்துக்கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு : பல்கலைக்கழகத்தால், வயதுவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
GATE தேர்வை நிறைவு செய்துள்ள மாணவர்கள், இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க தேவையில்லை. அவர்கள் நேரடியாக சேர்க்கையின் போது விண்ணப்பித்தால் போதும். பி.இ., மற்றும் பி. டெக். படிப்புகளை லேட்டரல் எண்ட்ரி, தொலைநிலைக்கல்வி மற்றும் வார இறுதி வகுப்புகள் மூலம் படித்தவர்கள், TANCA 2019 தேர்விற்கு விண்ணப்பிக்க இயலாது.
விண்ணப்ப கட்டணம்
பொதுப்பிரிவு மாணவர்களுக்கு - ரூ. 500
எஸ்.சி மற்றும் எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கு - ரூ.250
கவுன்சிலிங் கட்டணம்
கவுன்சிலிங் கட்டணத்தை, விண்ணப்பதாரர்கள் DD ஆக எடுத்து அனுப்ப வேண்டும்
பொதுப்பிரிவு மாணவர்களுக்கு - ரூ. 5,300
எஸ்.சி மற்றும் எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கு - ரூ.1,150
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.