TANCET 2020 Admit Card Download: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) 2020க்கான அட்மிட் கார்ட் வெளியாகியுள்ளது. tancet.annauniv.edu என்ற அதிகாரப்பூர்வ பல்கலைக்கழக வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நுழைவுத் தேர்வு பிப்ரவரி 29/மார்ச்1 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். டான்செட் நுழைவுத் தேர்வில் தகுதியடைந்தவர்கள் மாநிலத்தில் எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம். ஆர்ச், எம்.பிளான் போன்ற துறைகளில் சேர தகுதியுடையவர்கள்.
டான்செட் 2020 தேர்வுக்கு மொத்தம் 52,416 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும், விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
TANCET 2020 அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி :
ஸ்டேப் 1: மேலே குறிப்பிடப்பட்ட அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்ல வேண்டும்.
படி 2: முகப்புப்பக்கத்தில், ஹால் டிக்கெட் என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
படி 3: உங்கள் உள்நுழைவு விவரங்களை உள்ளிடவும்
படி 4: அட்மிட் கார்டு திரையில் தோன்றும்
படி 5: பதிவிறக்கம் செய்து அச்சிடுக
TANCET 2020 அட்மிட் கார்டில் உள்ள அனைத்து விவரங்களையும் சரியாக உள்ளதா என்பதை தேர்வர்கள் கவனமாக சரிபார்க்க வேண்டும்.
டான்செட் நுழைவுத் தேர்வு தேதிகள்:
எம்சிஏ
பிப்ரவரி 29, 2020 (காலை 10 மணி முதல் 12 மணி வரை)
எம்பிஏ
பிப்ரவரி 29, 2020 (பிற்பகல் 2.30 முதல் மாலை 4.30 வரை)
ME / MTech / MArch / MPlan
மார்ச் 1, 2020 (காலை 10 மணி முதல் 12 மணி வரை)
ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சென்னையில் உள்ள பல சுயநிதி கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் சேருவதற்காக டான்செட் நடத்தப்படுகிறது. உத்தியோகபூர்வ அட்டவணைப்படி டான்செட் நுழைவுத் தேர்வு முடிவுகள் மார்ச் 20 ஆம் தேதி வெளியிடப்படும்.