TANCET 2021: அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில், முதுநிலை படிப்புகளான எம்.பி.ஏ எம்.சி.ஏ மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் 2021-2022 கல்வி ஆண்டில் சேருவதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கான (டான்செட்-2021) விண்ணப்ப செயல்முறை தொடங்கியுள்ளது.
டான்செட் 21 க்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை வரும் பிப்ரவரி 12ம் தேதியோடு முடிவடைகிறது. மார்ச் 20, 21 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறும்.
டான்செட் 2021: விண்ணப்பிப்பது எப்படி
ஸ்டேப் 1 – அதிகாரப்பூர்வ அண்ணா பல்கலைக்கழக வலைத்தளத்திற்கு (tancet.annauniv.edu) செல்லுக
ஸ்டேப் 2 – திரையின் மேலே “TANCET Registration” என்ற இணைப்பைக் கிளிக் செய்க.
ஸ்டேப் 3 – விண்ணப்பதாரரின் பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி, எஸ்.எஸ்.எல்.சி பதிவு எண் உள்ளிட்ட அடிப்படைத் தகவலை கொடுத்து பதிவு செய்க
ஸ்டேப் 4 – பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் மூலம் விண்ணப்ப செயல்முறைக்குள் நுழையவும்.
ஸ்டேப் 5 – தேர்வுக்கான விவரங்களை நிரப்பி “சப்மிட்” என்பதைக் கிளிக் செய்க.
ஸ்டேப் 6 – விண்ணப்ப படிவத்தின் நகலைப் பதிவிறக்கம் செய்க.
விண்ணப்பக் கட்டணம்:
தேர்வு முறை:
எம்பிஏ: வினாத்தாளில் நூறு கேள்விகள் இருக்கும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும், 1/3 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.
எம்.சி.ஏ: வினாத்தாளில் நூறு கேள்விகள் இருக்கும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும், 1/3 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.
எம்இ/ எம்.டெக் / எம்.ஆர்ச்./எம்.ப்ளான்: வினாத்தாள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பகுதி -1ல் 20 கேள்விகள், பகுதி II ல் 35 கேள்விகள், பகுதி -3ல் 60 கேள்விகள் இருக்கும்.
கல்வி தகுதி :
எம்.பி.ஏ பட்டபடிப்புக்கு, மாணவர்கள் தங்கள் இளங்கலை படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இடஒதுக்கீடு பெறும் மாணவர்களுக்கு, இது 45 சதவீதமாகும்.
எம்.சி.ஏ பட்ட படிப்பு – தேர்வர்கள் தங்கள் இளங்கலை படிப்பில், கணிதத்தை கட்டாயப்பாடமாக படித்திருக்க வேண்டும், 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இடஒதுக்கீடு பெறும் மாணவர்களுக்கு, இது 45 சதவீதமாகும்.
எம்.சி.ஏ (லேட்ரல் என்ட்ரி) – மாணவர்கள் பி.சி.ஏ, பி.எஸ்சி போன்ற இளங்கலை பட்டத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இடஒதுக்கீடுப் பெறும் மாணவர்களுக்கு, இது 45 சதவீதமாகும்.
எம்இ/ எம்.டெக் / எம்.ஆர்ச்./எம்.ப்ளான்– தேர்வர்கள், இளங்கலை பட்டத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இடஒதுக்கீடுப் பெறும் மாணவர்களுக்கு, இது 45 சதவீதமாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.