TANCET 2020 Registration: அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில், முதுநிலை படிப்புகளான எம்.பி.ஏ எம்.சி.ஏ மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் 2021-2022 கல்வி ஆண்டில் சேருவதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கு (டான்செட்-2021) விண்ணப்பங்கள் வெளியாகியுள்ளன.
டான்செட் 21 க்கான விண்ணப்ப செயல்முறை ஜனவரி 19ம் தேதி முதல் தொடங்குகிறது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 12ம் தேதியாகும். மார்ச் 20, 21 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறும்.
கல்வி தகுதி :
எம்.பி.ஏ பட்டபடிப்புக்கு, மாணவர்கள் தங்கள் இளங்கலை படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இடஒதுக்கீடு பெறும் மாணவர்களுக்கு, இது 45 சதவீதமாகும்.
எம்.சி.ஏ பட்ட படிப்பு – தேர்வர்கள் தங்கள் இளங்கலை படிப்பில், கணிதத்தை கட்டாயப்பாடமாக படித்திருக்க வேண்டும், 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இடஒதுக்கீடு பெறும் மாணவர்களுக்கு, இது 45 சதவீதமாகும்.
எம்.சி.ஏ (லேட்ரல் என்ட்ரி) – மாணவர்கள் பி.சி.ஏ, பி.எஸ்சி போன்ற இளங்கலை பட்டத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இடஒதுக்கீடுப் பெறும் மாணவர்களுக்கு, இது 45 சதவீதமாகும்.
எம்இ/ எம்.டெக் / எம்.ஆர்ச்./எம்.ப்ளான்– தேர்வர்கள், இளங்கலை பட்டத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இடஒதுக்கீடுப் பெறும் மாணவர்களுக்கு, இது 45 சதவீதமாகும்.
தேர்வு முறை:
எம்பிஏ, எம்.சி.ஏ நுழைவுத் தேர்வில், 100 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். ஒவ்வொரு தவறான விடைக்கும், 3ல் 1 பங்கு மதிப்பெண் கழிக்கப்படும
டான்செட் பற்றி :
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களிலும் மாஸ்டர் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்டரிங் மாஸ்டர் ஆஃப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், மாஸ்டர் ஆஃப் டெக்னாலஜி, மாஸ்டர் ஆஃப் பிளானிங் போன்ற படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்காக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் தேர்வின் பெயர் டான்செட் ஆகும்