TANCET 2024: தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கான (TANCET 2024) தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மார்ச் 9 ஆம் தேதி எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும்.
ஆங்கிலத்தில் படிக்க: TANCET 2024 exam dates announced; registration begins on January 10
டான்செட் தேர்வுக்கான பதிவு செயல்முறை ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கும். விண்ணப்பப் படிவங்கள் வெளியிடப்பட்டதும், தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tancet.annauniv.edu/tancet/index.html இல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் TANCET 2024 க்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 7 வரை அவகாசம் உள்ளது.
TANCET 2024 தேர்வு தேதி: தெரிந்துக் கொள்வது எப்படி?
படி 1: TANCET - https://tancet.annauniv.edu/tancet/index.html என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
படி 2: முகப்புப் பக்கத்தில், கீழே ஸ்க்ரோல் செய்து தேர்வு தேதி மற்றும் நேரத்தைக் காணவும்.
படி 3: தேர்வு தேதி மற்றும் நேரம் திரையில் காட்டப்படும்.
படி 4: அதை எதிர்கால குறிப்புக்காக ஸ்கிரீன்ஷாட் எடுத்துக் கொள்ளவும்.
அட்டவணையின் படி, மார்ச் 9 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை எம்.சி.ஏ தேர்வும், அதே நாளில் பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை எம்.பி.ஏ தேர்வும் நடைபெறும்.
பல்கலைக்கழகத் துறைகள், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டல வளாகங்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் (பொறியியல், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்) மற்றும் சுயநிதி கல்லூரிகள் (தனிப்பட்ட நிறுவனங்கள் உட்பட பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்) ஆகியவற்றில் தொழில்முறை முதுகலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வை தமிழ்நாடு அரசு சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“