எம்பிஏ,எம்இ படிப்புகளுக்கான டான்செட் தேர்வு – அறிவிப்பு வெளியீடு

TANCET 2020 Exam Date, Preparation, Syllabus, Fee : டான்செட் 2020க்கான விண்ணப்ப செயல்முறை ஜனவரி 7ம் தேதி முதல் தொடங்குகிறது.

By: Updated: January 1, 2020, 04:37:01 PM

TANCET 2020 Registration: தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) 2020 க்கான விண்ணப்ப செயல்முறை ஜனவரி 7ம் தேதி முதல் தொடங்குகிறது. வேட்பாளர்கள் இந்த தேர்வுக்கு  ஜனவரி 31ம் தேதி  வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு பிப்ரவரி 29 மற்றும் மார்ச் 1 தேதிகளில் நடத்தப்படுகிறது.

டான்செட் 2020: விண்ணப்பிப்பது எப்படி

ஸ்டேப்  1 – அதிகாரப்பூர்வ அண்ணா பல்கலைக்கழக வலைத்தளத்திற்கு (annauniv.edu) செல்லுக

ஸ்டேப் 2 – திரையின் இடது பக்கத்தில் “TANCET 2020” என்ற இணைப்பைக் கிளிக் செய்க.

ஸ்டேப்  3 – தேர்வுக்கான ”வழிமுறைகள் மற்றும் தகவல்களை” படிக்க வழங்கப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்க .

ஸ்டேப்  4 – “ஆன்லைன் பதிவு” என்பதை கிளிக் செய்க .

ஸ்டேப்  5 – அடிப்படைத் தகவலை கொடுத்து பதிவு செய்க.

ஸ்டேப்  6 – பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை நிரப்புக .

ஸ்டேப்  7 – தேர்வுக்கான விவரங்களை நிரப்பி “சப்மிட்” என்பதைக் கிளிக் செய்க.

ஸ்டேப் 8 – விண்ணப்ப படிவத்தின் நகலைப் பதிவிறக்கம் செய்க

 


கல்வி தகுதி : 

எம்.பி.ஏ பட்ட படிப்பு – தேர்வர்கள், இளங்கலை பட்டத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட  பிரிவை சேர்ந்தவர்களுக்கு, இது 45 சதவீதமாகும்.

எம்.சி.ஏ பட்ட படிப்பு – தேர்வர்கள் தங்கள் இளங்கலை பட்டத்த்தில் கணிதத்தை கட்டாயம் ஒரு பாடமாகவும், குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.  ஒதுக்கப்பட்ட பிரிவை சேர்ந்தவர்களுக்கு, இது 45 சதவீதமாகும்.

எம்.சி.ஏ (லேட்ரல் என்ட்ரி) – வேட்பாளர்கள் பி.சி.ஏ, பி.எஸ்சி போன்ற இளங்கலை பட்டத்தில்  குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட பிரிவை சேர்ந்தவர்களுக்கு, இது 45 சதவீதமாகும்.

எம்இ/ எம்.டெக் / எம்.ஆர்ச்./எம்.ப்ளான்–  தேர்வர்கள், இளங்கலை பட்டத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட  பிரிவை சேர்ந்தவர்களுக்கு, இது 45 சதவீதமாகும்

மேலும், விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

தேர்வு நடைமுறை

தேர்வுகளில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு முறை

எம்பிஏ: வினாத்தாளில் நூறு கேள்விகள் இருக்கும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும், 1/3 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.

எம்.சி.ஏ: வினாத்தாளில் நூறு கேள்விகள் இருக்கும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும், 1/3 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.

எம்இ/ எம்.டெக் / எம்.ஆர்ச்./எம்.ப்ளான்: வினாத்தாள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பகுதி -1ல் 20 கேள்விகள், பகுதி II ல் 35 கேள்விகள், பகுதி -3ல் 60 கேள்விகள் இருக்கும்.

விண்ணப்பக்  கட்டணம்:

டான்செட் பற்றி :

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களிலும் மாஸ்டர் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்டரிங் மாஸ்டர் ஆஃப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், மாஸ்டர் ஆஃப் டெக்னாலஜி, மாஸ்டர் ஆஃப் பிளானிங் போன்ற  படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்காக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும்  தேர்வின் பெயர் டான்செட்  ஆகும்

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Education-jobs News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Tancet registration 2020 check eligibility exam date pattern fee annauniv edu

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X