/tamil-ie/media/media_files/uploads/2019/05/z576.jpg)
TANGEDCO one year apprenticeship Program
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் டிப்ளோமா மற்றும் இன்ஜினியரிங் படித்த மாணவர்களுக்கு ஒரு வருட தொழிற்பழகுனருக்கான விண்ணபங்களை வரவேற்கின்றது. மத்திய தொழிற்பழகுநர் பயிற்சி வாரியமும் ( National Apprenticeship Training Scheme (NATS ) , தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து இந்த முயற்ச்சியை மேற்கொள்கின்றன.
பட்ட மற்றும் பட்டய (Degree/Diploma ) பொறியியல் மாணவர்கள்( எலெக்ட்ரிக்கல் / எலெக்ட்ரானிக்கல் இன்ஜினியரிங் , எலெக்ட்ரானிக்கல் மற்றும் கம்யூனிக்கேஷன் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங் , மெக்கானிக்கல் இன்ஜினியரிங் & கம்ப்யூட்டர் சயின்ஸ் / கம்ப்யூட்டர் சயின்ஸ் & இன்ஜினியரிங் ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தொழிற்பழகுனருக்கான விண்ணப்பங்களை அனுப்பலாம்.
2017, 2018 ,2019 போன்ற வருடங்களில் மாணவர்கள் பட்டங்களை முடித்திருக்க வேண்டும்.
விருப்பமுள்ள மற்றும் மேற்கூறிய தகுதி உள்ள மாணவர்கள் mhrdnats.gov.in என்ற இணைய தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். அடுத்த நவம்பர் மாதம் ஐந்தாம் தேதிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அனைத்து விண்ணப்பங்களும் ஆன்லைனில் மூலமே பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள், இது தொடர்பாக மேலும் விவரங்களை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் boat-srp.com (Board of apprenticeship Training- Southern Region ) என்ற இணைய தளத்திற்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.