தமிழ்நாடு மின்சார வாரியம் : கணக்கீட்டாளர் தேர்வில் சாதிப்பது எப்படி?

Tangedco கணக்கீட்டாளர் பணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை பிப்ரவரி 10ம் தேதியோடு நிறைவடைகிறது.

By: January 30, 2020, 6:30:17 PM

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ( TANGEDCO) சில நாட்களுக்கு முன்பு 500 இளநிலை கணக்கு உதவியாளர், 1300 கணக்கீட்டாளர், 600 உதவி பொறியாளர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இதில்,கணக்கீட்டாளர் பணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. காலியிடங்களின் எண்ணிக்கை இதில் அதிகமாக உள்ளது. மேலும், பெரும்பாலான கல்வித் தகுதி மாணவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

உதாரணமாக கலை, அறிவியல், வணிகவியல் ஆகிய பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருந்தால் போதுமானது. மாறாக, இளநிலை கணக்கு உதவியாளர் பணிக்கு இளங்கலை வணிகவியல்(B.Com)பட்டம் பெற்றவர்களும், உதவி பொறியாளர் பணிக்கு இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றவர்களும் தான் விண்ணபிக்க முடியும்

கணக்கீட்டாளர்  பணிக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை முடியும் நாள் பிப்ரவரி 10ம் தேதியாகும்.

கணக்கீட்டாளர்  பணிக்கான தேர்வு முறை: 

 

டிகிரி ஸ்டாண்டர்டு அளவில் தான் கேள்விகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கலை, அறிவியல், வணிகம் போன்ற பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் ஆங்கிலத்திலும் சில பிரிவுகளில் உள்ள கேள்விகள் தமிழிலும் இருக்கும்.

சிலபஸ் :

பகுதி I – 20 கேள்விகள், 20 மதிப்பெண்கள்

 

பகுதி II – 20 கேள்விகள், 20 மதிப்பெண்கள்

 

பகுதி III – 60 கேள்விகள், 60 மதிப்பெண்கள்

 

 

விண்ணப்பக் கட்டணம்: முற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(முஸ்லிம்) வகுப்பினருக்கு ரூ.1000 விண்ணப்பக் கட்டணம்.

ஆதிதிராவிடர்,ஆதிதிராவிடர்(அருந்ததியர்கள்), பழங்குடி வகுப்பினர், மற்றும் அனைத்து பிரிவினை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் ரூ. 500 விண்ணப்பக் கட்டணம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Tangedco assessor exam preparation 1300 vacancies

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X