தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான டான்ஜெட்கோவின் (Tangedco) வரவிருக்கும் ஆட்சேர்ப்பு இயக்கம் பற்றிய வதந்திகளை மறுத்து, போலி செய்திகளை நம்ப வேண்டாம் என்று இளைஞர்களை நிறுவனம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரிய வேலை வாய்ப்பு, ரூ.20,500 ஆரம்ப நிலை சம்பளத்துடன் 10,200 மதிப்பீட்டாளர்களுக்கான (மின் மீட்டர்களை கணக்கிட) ஆட்சேர்ப்பு இயக்கத்தை டான்ஜெட்கோ விரைவில் அறிவிக்கும் என்று கூறி, ஒரு சில வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் யூடியூப் வீடியோக்கள் இணையத்தில் வலம் வந்தன. இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு முடித்த எவரும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்றும் வைரலான வீடியோவில் கூறப்பட்டு இருந்தது.
இதையும் படியுங்கள்: ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!
இந்தநிலையில், அப்படியான வேலை வாய்ப்பு அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என டான்ஜெட்கோ அதிகாரிகள் மறுத்துள்ளனர் மற்றும் இந்த அறிவிப்பு போலியானது என்றும் கூறியுள்ளனர். டான்ஜெட்கோ இதுபோன்ற எந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தையும் நடத்தத் திட்டமிடவில்லை. அப்படி ஏதேனும் இருந்தால், அது டான்ஜெட்கோவின் இணையதளத்தில் அறிவிக்கப்படும், என்று ஒரு அதிகாரி கூறினார்.
தற்போதுள்ள அனைத்து மீட்டர்களையும் ஸ்மார்ட் மீட்டர்களாக மாற்றியமைத்தால் மதிப்பீட்டாளர் பணி தேவையற்றதாகிவிடும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil