Advertisment

தமிழக பொறியாளர்களுக்கு சூப்பர் சான்ஸ், மிஸ் பண்ணாம பாருங்க

ஆர்வமும், தகுதியும் உள்ள தேர்வர்கள் வரும் மார்ச் மாதம் 16-ஆம் தேதிக்குள் Tangedco உதவி பொறியியாளர் பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

author-image
WebDesk
Mar 09, 2020 17:16 IST
neet 2020 exam window reopen, neet Exam online application february 9

Tangedco junior Engineer Exam apply online

TANGEDCO Recruitment: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 600 உதவி பொறியாளர் பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள தேர்வர்கள் வரும் மார்ச் மாதம் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Advertisment

காலி பணியிடங்கள் : 600 உதவி பொறியாளர்

ஊதிய நிலை - ரூ.39800 முதல் 126500 வரை

எலெக்ட்ரிகல் & எலக்ட்ரானிக்ஸ் – 400,

எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்,எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ருமென்டேஷன்  – 125,

சிவில் இன்ஜினியரிங் – 75

முக்கிய தேதிகள்: பிப்ரவரி 15ஆம் தேதி முதல் , மார்ச் 16ம் தேதி வரையில் தேர்வர்கள் ஆன்லைன்யில் விண்ணப்பிக்கலாம்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

publive-image

இந்த பணிக்கு கணினி அடிப்படையிலான தேர்வு நடைபெறும்  இதற்கான தேதி, நேரம் tangedco.gov.in என்ற இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் (EEE/ECE/EIE/CSE/IT/Mechanical/Civil (அ) AMIE தேர்வில் எலெக்ட்ரிக்கல்/மெக்கானிக்கல்/சிவில் பிரிவில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்)

publive-image

தேர்வுமுறை:

publive-image

விண்ணப்பக் கட்டணம்: முற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(முஸ்லிம்) வகுப்பினருக்கு ரூ.1000 விண்ணப்பக் கட்டணம்.

ஆதிதிராவிடர்,ஆதிதிராவிடர்(அருந்ததியர்கள்), பழங்குடி வகுப்பினர், மற்றும் அனைத்து பிரிவினை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் ரூ. 500 விண்ணப்பக் கட்டணம்.

#Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment