TNEB TANGEDCO Recuritment 2020 : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கடந்த ஜனவரி 8-ம் தேதி 600 உதவி பொறியாளர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதில் மின்னியல் பிரிவில் 400, இயந்திரவியல் பிரிவில் 125, கட்டடவியல் பிரிவில் 75 போன்று இடங்கள் ஒதுக்கப் பட்டிருந்தன.
இந்த பணிக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை இந்த (பிப்ரவரி) மாதம் 24ம் தேதி வரையில் நடத்தபப்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், போதிய விளம்பரம் இல்லாததால் அதிகமான தேர்வர்கள் இன்னும் விண்ணபிக்கவில்லை என்பதை கண்டறிந்த மின்உற்பத்தி கழகம் இதற்கான கடைசி தேதியை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், TNEB Assistant Engineer Recruitment 2020 பணிக்கு விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதியை மார்ச் 16 ஆம் தேதி வரையில் நீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கு மார்ச் 19 ஆம் தேதி வரையில் அவகாம் வழங்கப்பட்டுள்ளது.
உதவி பொறியாளர் பணி குறித்த மேலும் சில விவரங்கள்:
ஊதிய நிலை: ரூ. 39800 – 126500(அதிகாரிகள்)
இந்த பணிக்கு கணினி அடிப்படையிலான தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி, நேரம் tangedco.gov.in என்ற இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் (EEE/ECE/EIE/CSE/IT/Mechanical/Civil (அ) AMIE தேர்வில் எலெக்ட்ரிக்கல்/மெக்கானிக்கல்/சிவில் பிரிவில் தேர்ச்சிப் பெற்று இருக்க வேண்டும்)
விண்ணப்பக் கட்டணம்: முற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(முஸ்லிம்) வகுப்பினருக்கு ரூ.1000 விண்ணப்பக் கட்டணம்.
ஆதிதிராவிடர்,ஆதிதிராவிடர்(அருந்ததியர்கள்), பழங்குடி வகுப்பினர், மற்றும் அனைத்து பிரிவினை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் ரூ. 500 விண்ணப்பக் கட்டணம்.