Advertisment

தமிழ்நாடு மின்சார வாரிய வேலை வாய்ப்பு; டிப்ளமோ தகுதிக்கு 500 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் பயிற்சியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 500 பணியிடங்கள்; டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு

author-image
WebDesk
New Update
chennai powercut, powercut in chennai, tangedco, chennai power cut, power cut in chennai today, chennai power cut today, power cut in chennai, tneb, tneb reading, tangedco bill status, power shutdown in chennai today, power shutdown in chennai, power shutdown notice chennai

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக வேலைவாய்ப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO) டெக்னீசியன் அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 20.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Technician (Diploma) Apprentices

காலியிடங்களின் எண்ணிக்கை: 500

Electrical and Electronics Engineering - 395

Electronics and Communication Engineering - 22

Electronics and Instrumentation Engineering - 9

Computer Engineering/ Information Technology - 9

Civil Engineering - 15

Mechanical Engineering - 50

கல்வித் தகுதி : 2020, 2021, 2022, 2023 ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் Diploma in Engineering/Technology படித்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை : ரூ. 8,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு டிப்ளமோ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு https://nats.education.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் முதலில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே இணையதளத்தில் தேடுதல் பக்கத்தில் TANGEDCO எனத் தேடி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.02.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://boat-srp.com/wp-content/uploads/2024/02/TANGEDCO_Notification_updated.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment