குறைந்த கல்வித் தகுதி போதும்: தமிழக மின் வாரியத்தில் 2900 பணியிடங்கள்

TANGEDCO 2900 Post Recuritment : தேர்வு தேதி, நேரம் tangedco.gov.in என்ற இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது

TANGEDCO Field Assistant Recruitment 2021:  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ( TANGEDCO) காலியாக உள்ள கள உதவியாளா் (பயிற்சி) பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அறிவித்தது.

கடந்தண்டு, 2900 கள உதவியாளா் (பயிற்சி) பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் வெளியிட்டது. இருப்பினும், கொரோனா பொது முடக்கம் காரணமாக இந்த ஆட்சேர்ப்பை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக மின் உற்பத்தி கழகம் அறிவித்தது. தற்போது, இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை 2021 பிப்ரவரி 15  முதல் மார்ச் 16ம் தேதி வரை மாற்றியமைத்துள்ளது.  இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முக்கிய தேதிகள்:  பிப்ரவரி 15ம்  தேதி முதல் தொடங்கி, மார்ச் 16ம் தேதி முதல் தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்:  முற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(முஸ்லிம்) வகுப்பினருக்கு ரூ.1000 விண்ணப்பக் கட்டணம்.

ஆதிதிராவிடர்,ஆதிதிராவிடர்(அருந்ததியர்கள்), பழங்குடி வகுப்பினர், மற்றும்  அனைத்து பிரிவினை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் ரூ. 500 விண்ணப்பக் கட்டணம்.

தேர்வுமுறை: இந்த பணிக்கு கணினி அடிப்படையிலான தேர்வு  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி, நேரம் tangedco.gov.in என்ற இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: எலக்ட்ரீஷியன் (அ) வயர்மேன் (அ) எலக்ட்ரிக்கல் போன்ற ஏதாவது ஒரு பாடப்பிரிவில் ஐடிஐ எனப்படும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் படித்து  தொழில் பழகுநர் பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:  பொதுப் பிரிவினர் 18 முதல் 30 வயதுக்குள்ளாகவும், பட்டியல் இனத்தவர், பட்டியல் பழங்குடியினர், ஆதரவற்ற விதவைகள் 18 முதல் 35  வயதுக்குள்ளும், பிரபடுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர்  வகுப்பினர் 18 முதல் 32க்குள்ளும் இருக்க வேண்டும்.

tangedco.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tangedco recuritment 2900 job vacancies field assistant trainee jobs tangdco recruitment

Next Story
காவல் துறையில் பணி செய்ய வேண்டும் என்பது உங்கள் ஆசையா? இதோ அந்த வாய்ப்பு.Tamil Nadu Police Recruitment 2018
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com