TANUVAS 2025: பி.வி.எஸ்.சி கவுன்சலிங்; எந்த ரேங்க் வரை சீட் கிடைக்கும்?
TANUVAS Admission 2025: தமிழக கால்நடை மருத்துவ கல்லூரிகளில் பி.வி.எஸ்.சி மற்றும் பி.டெக் படிப்புகளுக்குக்கு எந்த ரேங்க் வரை சீட் கிடைக்கும்? முழு விபரம் இங்கே
TANUVAS Admission 2025: தமிழக கால்நடை மருத்துவ கல்லூரிகளில் பி.வி.எஸ்.சி மற்றும் பி.டெக் படிப்புகளுக்குக்கு எந்த ரேங்க் வரை சீட் கிடைக்கும்? முழு விபரம் இங்கே
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பி.வி.எஸ்.சி மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு இந்த ஆண்டு எந்த ரேங்க் வரை சீட் கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு அடுத்தப்படியாக அதிகம் விரும்பப்படுவது பி.வி.எஸ்.சி (B.V.Sc & AH) எனப்படும் கால்நடை மருத்துவ படிப்பு தான். எம்.பி.பி.எஸ் படிப்புக்கு நீட் தேர்வில் தகுதி பெற வேண்டும் என்ற நிலையில், பி.வி.எஸ்.சி படிப்புக்கு 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலே சேர்க்கை நடைபெறும். இதனால் இந்த படிப்பில் சேர, நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்கள் விரும்புவார்கள்.
மேலும், அரசு கால்நடை மருத்துவமனைகளில் மருத்துவராகும் வாய்ப்பு மற்றும் தனியார் துறையிலும் ஏராளமான வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதால், 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் இந்த படிப்பில் சேர போட்டியிடுவர். இந்தப் படிப்புக்கு இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அடுத்ததாக பி.டெக் படிப்புகளும் இந்த கல்லூரிகளில் உள்ளன. பி.டெக் படிப்புக்கு கணிதம் படித்திருக்க வேண்டும். இந்தப் படிப்புகளை படிக்க தமிழகத்தில் 7 அரசு கல்லூரிகள் மட்டுமே உள்ளன.
இந்தநிலையில், இந்த கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு எந்த ரேங்க் வரை சீட் கிடைக்க வாய்ப்புள்ளது? என்பது ட்ரெண்டிங் தமிழ் கோபி என்ற யூடியூப் சேனலில் விளக்கப்பட்டுள்ளது. பி.வி.எஸ்.சி படிப்பில் மொத்தம் 660 இடங்கள் உள்ளன. மேலும், உணவு தொழில்நுட்பம் 40 இடங்கள், கோழி வளர்ப்பு 40 இடங்கள், பால் தொழில்நுட்பம் 20 இடங்கள் உள்ளன. இதில் 79 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும்.
Advertisment
Advertisements
மீதமுள்ள 597 இடங்கள் மாநில கவுன்சலிங் மூலம் நிரப்பப்படும். இதில் 40 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும். 30 இடங்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும், 5 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கும், 2 இடங்கள் முன்னாள் இராணுவத்தினர் பிரிவுக்கும் வழங்கப்படும். மேலும் தொழிற்பிரிவு மாணவர்களுக்கு 30 இடங்கள் வழங்கப்படும்.
அந்த வகையில் 490 இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். இதில் பொது பிரிவு 151 இடங்கள், பி.சி 130 இடங்கள், பி.சி.எம் 15 இடங்கள், எம்.பி.சி 97 இடங்கள், எஸ்.சி 75 இடங்கள், எஸ்.சி.ஏ 14 இடங்கள், எஸ்.டி 7 இடங்கள் என பிரித்து வழங்கப்படும்.
தரவரிசைப் பட்டியலை பொறுத்தவரை, கடந்த ஆண்டை விட அதிகமாக இந்த ஆண்டு 57 மாணவர்கள் 200க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.